திருவள்ளூர்: ஆவடி அருகே அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு சென்னை அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தையின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் நட வடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவரது மனைவி சவுபாக்கியா. இந்த தம்பதியருக்கு 9 வயதில் டானியா என்ற மகள் உள்ளார். 4ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.
இந்நிலையில் முக அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் உதவி செய்யவேண்டும் என்று சிறுமி யின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமியின் தாய் கூறுகையில், "என் குழந்தை எல்லாருடைய குழந்தையைப் போலவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படு கிறேன். மற்ற குழந்தையுடன் பேசவும் விளையாடவும் மறுக்கி றாள். தனியாக இருக்க விரும்பு கிறாள். முடிந்தவரையில் என் குழந்தையைச் சரிப்படுத்தி கொடுக்கவேண்டும்," என்று கண்ணீர் மல்க கோரியிருந்தார்.
சிறுமி டான்யா, "எனக்கு விளையாட ஆசையாக உள்ளது. ஆனால், என் கன்னம் இப்படி இருப்பதால், மற்ற நண்பர்கள் என்னுடன் சேர்ந்து விளையாட மறுக்கிறார்கள். எனக்கு முதல்வர் ஐயா உதவவேண்டும்," என்று கோரியிருந்த நிலையில், முதல்வர் சிகிச்சைக்கு உத்தரவிட்டுள்ளார்.

