நீதிமன்றம்: வீட்டில் அமைதி நிலவ கணவரை வெளியேற்றலாம்

சென்னை: கண­வ­ரால் அடிக்­கடி பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டும்­போது அவரை வீட்­டில் இருந்து வெளி­யேற்­றி­னால் அமைதி நில­வும் என்­றால், அதற்­கான உத்­த­ரவை நீதி­மன்­றங்­கள் தயங்­கா­மல் பிறப்­பிக்­க­லாம் என சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

விவா­க­ரத்து கோரிய மனைவி யும் குழந்­தை­களும் வீட்­டில் நிம்­மதி யாக வாழ­வேண்­டும் எனக் கூறி, கண­வரை வீட்­டை­விட்டு வெளி யேற்ற நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

பெண் வழக்­க­றி­ஞர் ஒரு­வர் தாக்­கல் செய்­தி­ருந்த மனு­வில், தொழி­ல­தி­ப­ரான எனது கண­வ­ரி­டம் இருந்து விவா­க­ரத்து கேட்டு குடும்ப நல நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­துள்­ளேன். அந்த வழக்கு இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது.

கண­வரை வீட்டை விட்டு வெளி­யேற்ற வேண்­டும் என்று தான் மனு­தாக்­கல் செய்­த­தா­க­வும் ஆனால், "இரு­வ­ரும் ஒரே வீட்­டில் இருந்­து­கொள்­ள­லாம். அதே­நே­ரம் மனை­வி­யைக் கண­வர் துன்­பு­றுத்­தக் கூடாது," என்று குடும்பநல நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­ட­தா­க­வும் மனு­தா­ர­ர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்த உத்­த­ரவை ரத்து செய்து கண­வரை வீட்டைவிட்டு வெளி­யேற்ற உத்­த­ர­வி­டு­மா­றும் அவர் கோரி­யி­ருந்­தார்.

இம்­ம­னுவை விசா­ரித்த நீதி­பதி மஞ்­சுளா, கண­வ­ரால் அச்­சு­றுத்­தல் இருப்­ப­தாக பெண் அச்­சம் தெரி­வித்­துள்ள நிலை­யில், "ஒரே வீட்­டில் இருக்­க­லாம், ஆனால், துன்­பு­றுத்­தக் கூடாது," என நீதி­மன்­றம் உத்­த­ர­விட முடி­யாது எனக் குறிப்­பிட்டு, குடும்ப நல நீதி­மன்ற உத்­த­ரவை ரத்து செய்து உத்­தரவிட்­டார்.

மனு­தா­ர­ரான வழக்­க­றி­ஞ­ரின் கண­வர் இரு வாரங்­களில் வெளி­யே­ற­வேண்­டும் என்­றும் இல்லையேல் காவல்­துறை உத­வி­யோடு வெளி­யேற்றவேண்­டும் என்­றும் உத்­த­ர­விட்டார்.

மனு­தா­ர­ரின் கண­வ­ரின் நட­வ­டிக்­கை­கள் சகித்­துக்­கொள்ள முடி­யாத நிலை­யில் உள்­ள­தா­கக் கூறிய நீதி­பதி, ஒரு பெண் சுதந்­தி­ர­மாக வாழ­வும் தனது பணி­களை மேற்­கொள்­ள­வும் அந்­தப் பெண்­ணின் கண­வர் இடை­யூறு கொடுத்து வந்தால் அது மோச­மாக இருக்­கும் என்­றும் கூறி­னார்.

கண­வ­ரால் வீட்­டில் அடிக்­கடி பிரச்­சினை ஏற்­படும் என்ற சூழ­லில் மனைவியை நிரந்­தர அச்­சத்­தில் வைக்கமுடி­யாது என­வும் குடும்­பத்­தில் அமைதி நிலவ கண­வரை வெளி­யே­றும்­படி உத்­த­ர­வி­ட­லாம் என்­றும் தீர்ப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!