தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்

தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்

1 mins read
275a7c34-579f-4bf3-bf8b-3e3ef1fa3649
-

நெல்லை: தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் (படம்) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

நெல்லையில் உள்ள தமது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக காலமானார் என்று குடும்பத்தார் தெரிவித்தனர்.

கடந்த 1970ஆம் ஆண்டு முதல் மேடைப் பேச்சாளராகவும் தரமான இலக்கிய, ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் விளங்கிய நெல்லை கண்ணன், பட்டிமன்றங்களி லும் பங்கெடுத்து பெயர் பெற்றார்.

மறைந்த முதல்வர் காமராஜர் மீது மிகுந்த பற்று கொண்ட அவர், தம்மை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு நீண்டகாலம் சேவையாற்றினார்.

மேடைதோறும் காமராஜரின் சிறப்புகள் குறித்து பல்வேறு சுவாரசிய மான தகவல்களைப் பகிர்ந்துவந்த நெல்லை கண்ணன், தமது நகைச்சுவை கலந்த பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். அவருக்கு, தமிழக அரசு அண்மையில் இளங்கோவடிகள் விருதளித்து கவுரவித்தது.

அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.