அமைச்சர்: பத்தாயிரம் ஆசிரியர்கள் நியமனம்

அமைச்சர்: பத்தாயிரம் ஆசிரியர்கள் நியமனம்

1 mins read
c6f98656-a7c1-449e-b009-bd1781462e03
-

திருச்சி: தமி­ழக அர­சுப் பள்ளிகளில் விரை­வில் பத்­தா­யி­ரம் ஆசி­ரி­யர்­கள் நிய­மிக்­கப்­பட உள்­ள­தாக பள்ளி கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில்­ ம­கேஷ் பொய்­யா­மொழி தெரி­வித்­துள்­ளார்.

திருச்­சி­யில் செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய அவர், பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­கன் பள்ளி மேம்­பாட்­டுத்­திட்ட நிதி ரூ.1,300 கோடி வந்த உடன் பள்­ளி­களில் வகுப்­ப­றை­கள், ஆய்­வ­கங்­கள் உள்­ளிட்ட கட்­ட­மைப்­பு­க­ளுக்­கான பணி­கள் தொடங்­கும் என்­றார்.

இந்த நட­வ­டிக்­கை­யில் மரத்­தடி­யில் வகுப்­பு­கள் நடக்­கும், 2,500 பள்­ளி­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்­றார் அமைச்­சர்.

"அர­சுப் பள்­ளி­களில் தமிழ் வழி, ஆங்­கில வழி ஆகி­ய­வற்­றில் எதை விரும்பி வரு­கி­றார்­களோ அதைக் கொடுக்­கும் வகை­யில் ஆசி­ரி­யர்­களுக்­குப் பயிற்சி அளிக்­கப்­பட்டு வரு­கிறது. இந்த ஆண்­டில் பத்­தா­யி­ரம் ஆசி­ரி­யர்­களை விரை­வில் நிய­மிக்க உள்­ளோம்.

"இதற்­காக, ஆசி­ரி­யர் தேர்வு வாரிய அட்­ட­வணை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது," என்­றார் அமைச்­சர் அன்­பில் ­ம­கேஷ் பொய்­யா­மொழி.