ஸ்டாலின் 4 நாள் சுற்றுப்பயணம்

ஸ்டாலின் 4 நாள் சுற்றுப்பயணம்

1 mins read
bfb2c0e2-eb28-44a0-aff3-2e30c3833322
-

கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாள்கள் கொங்குமண்டலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடக்கும் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.

இதற்காக வருகிற 23ஆம் தேதி மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். பின்னர் மறுநாள் காலை 10 மணிக்கு கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று, பின்னர் பொள்ளாச்சி செல்லும் முதல்வர், அங்கு மாலையில் திமுக கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது ஏராளமான மாற்றுக்கட்சியினர் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர்.