'பேருந்துகளில் பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்கக் கூடாது'

'பேருந்துகளில் பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்கக் கூடாது'

1 mins read
4bc3b55c-438f-4138-aab1-da776b404597
-

சென்னை: பேருந்­து­களில் பய­ணம் செய்­யும் பெண்­களை ஆண் பய­ணி­கள் முறைத்­துப் பார்க்­கக் கூடாது என புதிய வாகன விதி முறை அறி­வு­றுத்­து­கிறது.

பெண் பய­ணி­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக மோட்­டார் வாகன விதி­களில் திருத்­தம் செய்­யப்­பட்டு உள்­ளது.

அதன்­படி, பெண் பய­ணி­களை ஆண் பய­ணி­கள் முறைத்­துப் பார்க்­கக் கூடாது. கூச்­ச­லி­டக்­கூ­டாது, விசி­ல­டிக்­கக் கூடாது. பெண் பய­ணி­யி­டம் அத்­து­மீ­றல் செய்­தால் ஆண் பய­ணியை வாக­னத்­தில் இருந்து இறக்­கி­வி­ட­லாம்.

நடத்­து­ந­ரின் எச்­ச­ரிக்­கையை மீறும் ஆண் பய­ணியை வழி­யில் உள்ள காவல்­நி­லை­யத்­தில் ஒப் படைக்­க­லாம். ஆண் பய­ணி­கள் கூச்­ச­லி­டு­தல், கண் அடித்­தல், விசில் அடித்­தல், சமிக்ஞை காட்­டு­வது உள்­ளிட்­ட­வற்றை செய்­யக் கூடாது என பல்­வேறு அறி­வு­றுத்­தல்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

தமிழ்­நாடு மோட்­டார் வாகன விதி­க­ளி­லும் மேற்­கண்­ட­வாறு திருத்­தம் செய்து தமி­ழக அரசு அர­சி­த­ழில் வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.