மருந்தியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் எழிலரசன், தனியார் கல்லூரிப் பேராசிரியர் வசந்தகுமாரியைத் திருமணம் செய்யவிருக்கிறார்.
செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் திருமணத்திற்கான அழைப்பிதழை இவர் மாத்திரை அட்டை போல வித்தியாசமாக வடிவமைத்துள்ளார்.
மாத்திரை அட்டையின் பின்புறம் மருந்தின் பெயர், காலாவதியாகும் தேதி உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் இடம்பெறும் இடத்தில் இந்தத் திருமணம் குறித்த தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளன.
மருந்தின் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் எழில்வசந்தா-செப்-05 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலப் பொருள்கள் இருக்கும் இடத்தில் மணமக்களின் பெயர்கள், அவர்களது கல்வி விவரங்கள், வேலை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
காலாவதி தேதி இடம்பெறும் இடத்தில் நீல நிறத்தில் திருமணம், வரவேற்பு நாள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மாத்திரையின் தயாரிப்பு நிறுவனத் தகவல்கள் இருக்கும் இடத்தில் மணமக்களின் பெற்றோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், அன்னை தெரேசா நினைவு தினம், வ. ஊ. சி. பிறந்தநாள் எனப் பொது அறிவுத் தகவல்களையும் பதிவிட்டதோடு எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு ஒரு 'ஸ்மைலி' குறியீட்டுடன் உறவினர்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும் என அச்சிடப்பட்டுள்ளது.

