கொள்ளை அடித்த 32 கிலோகிராம் நகைகளை உருக்கி விற்கத் திட்டம்

கொள்ளை அடித்த 32 கிலோகிராம் நகைகளை உருக்கி விற்கத் திட்டம்

1 mins read
f364c03b-0ae6-4796-86db-cf9581cf8f79
-

சென்னை: அரும்­பாக்­கம் ஃபெடரல் வங்­கி­யில் இம்­மா­தம் 13ஆம் தேதி 32 கிலோ­கி­ராம் எடை­யுள்ள தங்க நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சம்­ப­வத்­தில் இது­வரை ஏழு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­களில் அச்­ச­ரப்­பாக்­கம் காவல்­நி­லை­யத்­தைச் சேர்ந்த அதி­காரி அமல்­ரா­ஜும் ஒரு­வர்.

இந்­தக் கொள்­ளைச் சம்­ப­வம் குறித்து ஒவ்­வொரு நாளும் பர­பரப்­பான தக­வல்­கள் வெளி­யான நிலை­யில், கொள்­ளை­ய­டித்த நகை­களை உருக்கி பின்­னர் தங்­கக் கட்­டி­க­ளாக மாற்றி விற்­ப­தற்­குக் கொள்­ளை­யர்­கள் திட்­ட­மிட்­டது தெரி­ய­வந்­துள்­ளது.

கோயம்­புத்­தூர் நகைக்­கடை உரி­மை­யா­ளர் ஒரு­வ­ரின் உத­வி­யு­டன் இதற்­கான இயந்­தி­ரத்­தை­யும் வாங்­கி­னர்.

பின்­னர் ஹோட்­டல் அறை­யில் நகை­களை உருக்­கத் தொடங்­கிய நகைக்­கடை உரி­மை­யா­ள­ரும் கொள்­ளை­யர்­களும் புகை­மூண்­ட­தால் அதைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­த­தா­கக் கூறப்­பட்­டது.