போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிக்கத் தீவிர நடவடிக்கை

போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிக்கத் தீவிர நடவடிக்கை

1 mins read
c5a09f1a-f2f3-4966-889d-78c0afe60502
-

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் குட்கா உள்­ளிட்ட போதைப் பொருள்­களை முற்­றி­லு­மாக ஒழித்­துக் கட்­ட­வேண்­டும் என்று முதல்­வர் மு. க. ஸ்டா­லின் கடந்த சில நாள்­க­ளுக்கு முன்­னர் உத்­த­ர­விட்­டார்.

இதையடுத்து காவல்­து­றைத் தலைமை இயக்­கு­நர் சைலேந்­தி­ர­பாபு, போதைப்பொருள் ஒழிப்பு நட­வ­டிக்­கை­களை முடுக்கி­விட்டுள்­ளார். நேற்று தமது அலு­வ­ல­கத்­தில் காவல்­துறை உய­ரதி­கா­ரி­க­ளு­டன் அவர் ஆலோ­சனை நடத்­தி­னார்.

இதில், சென்­னை­யைச் சேர்ந்த பல்­வேறு பிரி­வு­க­ளின் தலை­மைக் காவல் அதி­கா­ரி­கள் நேர­டி­யா­கவும் வெளி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்தோர் காணொளி வாயி­லா­கவும் கலந்­து­கொண்­ட­னர்.

கூட்டத்தில் பேசிய அதிகாரி சைலேந்திரபாபு, தமிழகத்தில் போதைப் பொருள்களை முற்­றி­லு­மாக ஒழிக்கத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் தீவி­ர­மாக மேற்­கொள்ளும்படி அதி­கா­ரி­களிடம் வலி­யு­றுத்­தி­னார். இதன்மூலம் போதைப் பொருள் இல்­லாத தமி­ழ­கத்தை உரு­வாக்க முடி­யுமென அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார். இதைத் தொடர்ந்து தமி­ழ­கம் முழு­வ­தும் போதைப் பொருள் ஒழிப்பு பணி­கள் மேலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட உள்­ளன.