கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் தாண்டந்தோட்டம் கிராமத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இருந்த ஐந்து சிலைகளைக் காணவில்லை என்று கோயில் நிர்வாகம் 2019ல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் புகார் அளித்திருந்தது. அதில் சம்பந்தர் சிலையும் அடங்கும்.
அதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நியூயார்க்கின் கிறிஸ்டி எனும் சிலைகள் ஏலத்துக்கான இணையத்தளத்தில் சம்பந்தர் சிலை விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
உரிமையை நிரூபித்து சிலையை இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பழங்கால வெண்கலத்தாலான சம்பந்தர் சிலை நடனபுரீஸ்வரர் கோயிலில் இருந்து 1971ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

