மாத்திரை அட்டையில் மணவிழா அழைப்பிதழ்

மாத்திரை அட்டையில் மணவிழா அழைப்பிதழ்

1 mins read
84eb10ce-e4f4-46e9-a963-da497dbd0704
-

திரு­வண்­ணா­மலை: மருந்­தி­யல் கல்­லூ­ரி­யின் உத­விப் பேரா­சி­ரி­ய­ர் எழி­ல­ர­சன், தனி­யார் கல்­லூ­ரிப் பேரா­சி­ரி­யர் வசந்­த­கு­மா­ரி­யைத் திரு­ம­ணம் செய்­ய­வி­ருக்­கி­றார். அடுத்­த­ மா­தம் 5ஆம் தேதி நடை­பெ­றும் திரு­ம­ணத்­திற்­கான அழைப்­பி­தழை இவர் மாத்­திரை அட்டை போல வித்­தி­யா­ச­மாக வடி­வ­மைத்­துள்­ளார் (படம்).

மாத்­திரை அட்­டை­யின் பின்­புறம் மருந்தின் பெயர், காலா­வதியாகும் தேதி உள்­ளிட்ட முக்­கியத் தக­வல்­கள் இடம்பெறும் இடத்தில் இந்தத் திரு­ம­ணம் குறித்த தக­வல்­கள் அச்சிடப்பட்டுள்ளன.

மருந்­தின் பெயர் இருக்க வேண்­டிய இடத்­தில் எழில்­வ­சந்தா-செப்-05 என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மூலப் பொருள்­கள் இருக்­கும் இடத்­தில் மண­மக்­க­ளின் பெயர்­கள், அவர்­க­ளது கல்வி விவ­ரங்­கள், வேலை குறித்த தக­வல்­கள் இடம் பெற்­றுள்­ளன.

காலா­வதி தேதி இடம்பெறும் இடத்­தில் நீல நிறத்­தில் திரு­ம­ணம், வர­வேற்பு நாள் குறித்த தக­வல்­கள் இடம் பெற்றுள்­ளன. மாத்­தி­ரை­யின் தயா­ரிப்பு நிறு­வ­னத்­ தக­வல்­கள் இருக்­கும் இடத்­தில் மண­மக்­க­ளின் பெற்­றோரது பெயர்­கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

­இந்­தி­யா­வில் அன்று ஆசி­ரி­யர் தினம் கொண்­டா­டப்­ப­டு­வ­தால், அன்னை தெரசா நினைவு தினம், வ. உ. சி. பிறந்­த­நாள் எனப் பொது அறி­வுத் தக­வல்­க­ளை­யும் பதி­விட்­ட­தோடு எச்­ச­ரிக்கை எனக் குறிப்­பிட்டு ஒரு 'ஸ்மைலி' குறி­யீட்­டு­டன் உற­வி­னர்­கள் தவ­றா­மல் பங்­கேற்க வேண்­டும் என அச்சிடப்பட்டுள்ளது.