உடற்பயிற்சி செய்வது அவசியம் என முதல்வர் அறிவுறுத்து

உடற்பயிற்சி செய்வது அவசியம் என முதல்வர் அறிவுறுத்து

1 mins read
e90a6ee0-06d4-426c-b0fc-252c0a733b93
சென்னையில் நடைபெற்ற 'ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், உடற்பயிற்சி செய்வதை வலியுறுத்தி சிறிது தூரம் மிதிவண்டி ஓட்டினார்.படம்: ஊடகம் -

சென்னை: ஒரு­வர் தமது உடல்­நலத்தைப் பேணிப் பாது­காத்­தால் கவ­லை­கள், மன சங்­க­டங்­கள் எல்­லாம் அவரை விட்டு ஓடி­வி­டும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் வாக­னம் இல்லாப் போக்­கு­வ­ரத்தை மேம்­ப­டுத்த அண்ணா­ ந­கர் பகு­தி­யில் நடை­பெற்ற 'ஹேப்பி ஸ்ட்­ரீட்ஸ்' என்ற நிகழ்ச்­சி­யில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா பாதிப்பில் இருந்து தாம் மீள உடற்­பயிற்சிதான் கார­ணம் என்­றார்.

"நல்ல உடல்­ந­லத்­துக்கு உடற்­பயிற்சி அவ­சி­யம். உடல்நலனைப் பேண மக்­கள் அனை­வ­ரும் உடற்­பயிற்சி செய்ய வேண்­டும். சாப்­பி­டும் போது பசி­யோடு அமர வேண்­டும், சாப்­பிட்ட பின் பசி­யோடு எழுந்­து­கொள்ள வேண்­டும்.

"எனக்கு கொரோனா தொற்று காரணமாகப் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. உடற்பயிற்சியே அதற்குக் காரணம். எனக்கு வயது 70 ஆகிறது. ஆனால் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பிபோல இருப்போம்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.