சூரிய மின்சக்தி மூலம் 2,400 மெகாவாட் மின்சாரம்: மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்

சூரிய மின்சக்தி மூலம் 2,400 மெகாவாட் மின்சாரம்: மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்

1 mins read
f716090e-19f1-4d4b-bbb1-1f822f82c5f9
சென்னை மெட்ரோ ரயில். கோப்புப்படம்: தகவல் ஊடகம் -

சென்னை: சூரிய மின்­சக்தி சாத­னங்­களை நிறுவி ஆண்­டு­தோ­றும் 2,400 மெகாவாட் மின்­சா­ரம் உற்­பத்தி செய்ய மெட்ரோ ரயில் நிறு­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது.

சென்­னை­யில் மெட்ரோ ரயில் திட்­டத்­தின் இரண்­டாம் கட்ட பணி­களை நிறை­வேற்­றும்­போது, உயர்­மட்ட பாதை, மெட்ரோ ரயில் நிலை­யங்­கள், பணி­ம­னை­களில் சூரிய மின்­சக்தி சாத­னங்­களை நிறுவ அந்­நி­று­வன அதி­கா­ரி­கள் முடிவு செய்­துள்­ள­னர்.

இதன் மூலம் திட்­ட­மிட்ட இலக்கை அடைய முடி­யும் என்று அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

"கார்­பன் வெளி­யேற்­றத்தைக் குறைத்­தல், பசு­மையைக் காத்­தல், பாது­காப்­பான மின் ஆற்­றலைப் பெறு­தல் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் சூரிய மின்­சக்தி திட்­டத்­துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறு­வ­னம் ஆரம்­பம் முதலே ஊக்­கம் அளித்து வரு­கிறது.

"அந்த வகை­யில், முதல்­கட்ட மெட்ரோ ரயில் திட்­டத்­தில் பல்வேறு பகு­தி­களில் மேற்­கூ­ரை­யில் சூரிய மின்­சக்தி சாத­னங்­களை மெட்ரோ ரயில் நிறு­வ­னம் நிறு­வி­யது," என்று அந்த அதி­கா­ரி­கள் கூறினர்.

மெட்ரோ ரயி­லு­டன் தொடர்­புள்ள இடங்­களில் சூரிய மின் உற்­பத்தி சாத­னங்­கள் மூலம் 6.56 மெகா­வாட் அள­வுக்கு சூரி­ய ­மின்­சக்தி பெறு­வ­தற்குத் தேவை­யான தக­டு­க­ளைப் பொருத்தி, மின்­சா­ரம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மெட்ரோ ரயில் நிறு­வ­னத்­தின் செல­வு­களில் மின்­சா­ரத்­தின் பங்கு மட்­டும் 40 விழுக்­காடு என்று சுட்­டிக்­காட்­டும் அதன் அதி­கா­ரி­கள், சூரிய மின்­சக்தி மூலம் ஆண்­டு­தோ­றும் ரூ.2 கோடி மின்­சார கட்­டணச் செலவு சேமிக்­கப்­படும் என்­ற­னர்.