விரிவுரையாளர் பணி தேர்வில் தமிழ்த்தாள் கட்டாயமானது

விரிவுரையாளர் பணி தேர்வில் தமிழ்த்தாள் கட்டாயமானது

2 mins read
f06c241c-3317-48f9-b8da-0b8d692f8208
-

சென்னை: விரி­வு­ரை­யா­ளர் பணிக்குத் தமிழ் மொழி தகுதித்­தாள் தேர்ச்சி கட்­டா­யம் என தமிழக ஆசி­ரி­யர் தேர்வு வாரி­யம் அறி­வித்­துள்­ளது.

24 மூத்த விரி­வு­ரை­யா­ளர், 82 விரி­வு­ரை­யா­ளர், 49 இள­நிலை விரி­வு­ரை­யா­ளர் என மொத்­தம் 155 காலி பணி­யி­டங்­கள் இருப்­ப­தாக அந்த வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

இம்­முறை காலி­யாக உள்ள அனைத்து பணி­யி­டங்­க­ளுக்­கு­மான தேர்வு இணை­யம் (கணினி) மூலம் நடத்­தப்­பட உள்­ள­தா­க­வும் இது­கு­றித்த அறி­விப்பு விரை­வில் வெளி­வ­ரும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

தற்­போது காலி­யாக உள்ள விரி­வு­ரை­யா­ளர் பணி­யி­டங்­க­ளுக்­கான தேர்வு அறி­விப்பை ஆசி­ரி­யர் தேர்வு வாரி­யம் வெளி­யிட்­டுள்ள நிலை­யில், விரி­வு­ரை­யா­ளர் பணி­யி­டங்­க­ளுக்­கான தேர்­வில் தமிழ் மொழி தகுதித்தாள் அறி­மு­கப்­படுத்­தப்­பட்டு இருக்­கிறது.

"விரி­வு­ரை­யா­ளர் பணி­யி­டங்­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கும் தேர்­வர்­கள் 50 மதிப்­பெண்­ணுக்கு கேட்­கப்­படும் தமிழ் மொழி தகு­தித் தாள் தேர்­வில் 20 (40%) மதிப்­பெண் பெற வேண்­டும்.

"அப்­படி பெற்­றால் மட்­டுமே 'பகுதி ஆ' பிரி­வில் பாடம் சார்ந்த 150 மதிப்­பெண்­க­ளுக்­கான வினாக்­கள் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­படும்," என ஆசி­ரி­யர் தேர்வு வாரி­யம் அறி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் நடத்­தப்­படும் பல்­வேறு போட்­டித் தேர்­வு­களில் தமிழ் தெரி­யாத பிற மாநி­லத்­த­வர்­கள் கணி­ச­மான எண்­ணிக்­கை­யில் தேர்ச்சி பெற்று, பணி­யில் நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்­கள். இது­கு­றித்து பல்­வேறு தரப்­பி­ன­ரும் குற்­றச்­சாட்டு எழுப்பி வந்­த­னர்.

இதை­ய­டுத்து தமிழ்­நாடு அரசு பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம், போட்­டித் தேர்­வு­களில் தமிழ்த்தாள் தகு­தித் தேர்வை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அதன்­படி, தமிழ்த் தேர்­வில் தேர்ச்சி பெற்­றால் மட்­டுமே, அதற்கு அடுத்­த­ப­டி­யாக எழு­தி­யி­ருக்­கும் பொதுப்­பாட பிரிவு வினாக்­கள் கணக்­கில் கொள்­ளப்­படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.