தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு

2 mins read
3e828ba2-ee56-48eb-812d-9b99b1a73446
-

சென்னை: அர்ச்­ச­கர்­கள் நிய­ம­னம் தொடர்­பான வழக்­கில் சென்னை உயர் நீதி­மன்­றம் இன்று தீர்ப்­பளிக்க உள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு இது தொடர்­பான வழக்கு தொடுக்­கப்­பட்­டது.

18 முதல் 35 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் மட்­டுமே அர்ச்­ச­க­ராக முடி­யும், ஆகம பள்­ளி­களில் ஓராண்டு பயிற்சி முடித்து இருக்க வேண்­டும் என்­பன உள்­ளிட்ட பல்­வேறு பணி விதி­மு­றை­களை இந்து அற­நி­லை­யத்­துறை வெளி­யிட்­டது.

மேலும், மாநி­லம் முழு­வ­தும் உள்ள கோவில்­களில் அர்ச்­ச­கர்­கள், பூசா­ரி­கள், பரம்­பரை அறங்­கா­வ­லர்­கள் பணி நிய­ம­னம், நிபந்­தனை­கள் தொடர்­பா­க­வும் அந்­தத் துறை சார்­பில் புதிய பணி விதி­கள் கடந்த 2022ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்­டன.

இதை­ய­டுத்து புதிய விதி­களை ஏற்க இய­லாது என பல்­வேறு தரப்­பி­ன­ரும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர். அகில இந்­திய ஆதி­சைவ சிவாச்­சா­ரி­யார்­கள் சேவா சங்­கம் உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­பு­கள், தனி­ந­பர்­கள் சார்­பில் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­டன.

ஆகம விதி­க­ளைக் கடை­பி­டிக்­கா­மல் தமி­ழக அரசு கோவில்­களில் அர்ச்­ச­கர், ஓது­வார்­களை நிய­மிக்க உள்­ளதை ஏற்க இய­லாது என்­றும், பல கோவில்­களில் பரம்­பரை அறங்­கா­வ­லர்­கள் நிய­மிக்­கப்­ப­டாத நிலை­யில், தக்­கார்­கள் மூல­மாக அரசே அர்ச்­ச­கர்­களை நிய­மிப்­பது சட்­ட­வி­ரோ­த­மா­னது என்­றும் மனு­தா­ரர்­கள் தங்­கள் மனு­வில் குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

கோவில் அறங்­கா­வ­லர்­க­ளுக்கு மட்­டுமே அர்ச்­ச­கர்­களை நிய­மிக்க அதி­கா­ரம் உள்­ளது என்று வாதி­டப்­பட்­டது.

மேலும், குறிப்­பிட்ட பிரி­வைச் சார்ந்­த­வர்­களை மட்­டுமே அர்ச்­ச­கர்­க­ளாக நிய­மிக்க வேண்­டும் என ஆகம விதி­கள் உள்ள நிலை­யில், அதை மீறி அர்ச்­ச­கர் பயிற்சி முடித்த அனைத்து சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ராக நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ள­தா­க­வும் குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

இரு­த­ரப்பு வாதங்­க­ளை­யும் செவி­ம­டுத்த நீதி­ப­தி­கள் இந்த வழக்­கில் இன்று தீர்ப்பு அளிக்­கப்­படும் என தெரி­வித்­துள்­ள­னர்.