சென்னை: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு ஏழு ஆண்டுகளில் ரூ.16,914 கோடி ஒதுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நகரத்திற்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி நிதி வழங்கப்படும். இதைப்போன்று மாநில அரசு ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும். இவை இரண்டும் சேர்த்து ரூ.1,000 கோடிக்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தின்படி நகரின் ஒரு பகுதியைத் தேர்வு செய்து அந்தப் பகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய 'ஸ்மார்ட்' பகுதியாக மாற்றுதல், நகரில் பொதுமக்கள் தொடர்புடைய பல்வேறு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும், நடைபாதைகள் அமைத்தல், இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்
படுத்த வேண்டும்.
இதன்படி, தமிழகத்தில் 11 நகரங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டம் 2013 ஜூன் 25ஆம் தேதி தொடங்கப்பட்டு, தற்போது ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்தில் 714 திட்டங்களுக்கு ரூ.16,914 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.9,758 கோடி மதிப்பீட்டில் 348 பணிகள் நடைபெறுகின்றன. ரூ.7,155 கோடி செலவில் 366 பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
11 நகரங்களில் வேகமாக நடைபெறும் 'ஸ்மார்ட் சிட்டி' வேலைகள்

