மேல்முறையீட்டு மனுமீது இன்று விசாரணை
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அண்மையில் ஒரு தீர்ப்பை வெளியிட்டார்.
"ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்," என்று அதில் அவர் கூறியிருந்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "தனி நீதிபதி தனது அதிகாரத்தின் வரம்பை மீறி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கின் கோரிக்கையே ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான். எனவே, ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது தவறு.
"பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அது இயலாத காரியம். நாங்கள் இருவரும் மீண்டும் இணைந்து செயல்
படுவதற்கான சூழல் இல்லை. எனவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு வழக்குகளுக்கான எண் இடும் நடைமுறைகள் பிற்
பகல் 1.30 மணிக்கு முன்பாக முடிவுற்றால் மூன்று வழக்குகளையும் ஆகஸ்ட் 23ல் (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தது.

