செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
2729c32e-ab4f-4264-8b32-30bbafd2ca90
-

93 நாள்களாக அதே விலை

சென்னை: சென்னையில் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் என்று நீண்டநாள்களாக மாற்றமின்றி நீடித்த நிலையில், மே 21ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும் டீச லுக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அவர் அறிவித் தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் மே 22ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க் கும் டீசல் விலை ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று வரை 93வது நாளாக அதே விலை மாற்றமின்றி தொடர்ந்தது.

போதையில் ஓட்டுநர்; பேருந்தை ஓட்டிய நடத்துநர்:இருவரும் நீக்கம்

வந்தவாசி: திருப்பதியிலிருந்து புதுச்சேரி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து தடுமாற்றத்துடன் செல்வதை அறிந்து சந்தேகித்த பயணிகள், ஓட்டுநர் தரணேந்திரன் மதுபோதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட்டு ஹோலிப்பேஸ் என்னும் பேருந்து நடத்துநர் அந்தப் பேருந்தை ஓட்டத் தொடங்கினார். பயணிகள் தொடர்ந்து கூச்சலிட்டதால் வந்தவாசி கோட்டை மூலைப் பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மது போதையில் பேருந்தை ஓட்டியதற்காக தரணேந்திரனும் அனுமதியின்றி பேருந்தை இயக்கியதற்காக நடத்துநர் ஹோலிப்பேசும் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பூட்டாக மாறிய கைவிலங்கு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், காவல் நிலையத்தின் கதவுகளைப்

பூட்ட கைவிலங்கு பயன்படுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காவல்நிலையத்தின் பக்கவாட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கதவுகளுக்குப் பூட்டுப் போடாமல், கைதிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய கைவிலங்கு பயன்படுத்தி பூட்டப்பட்டு உள்ளது (படம்). கைவிலங்கைத் தவறாகப் பயன்படுத்திய நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாயத்துத் தலைவர் படுகொலை

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் தெற்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தார். அவரை நேற்று பிற்பகல் மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து தப்பியோடினர். இதில் பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அதே ஊரைச் சேர்ந்த பாஜக ஒன்றிய இளைஞரணித் தலைவர் கார்த்திக், 33, வசந்த், 18, ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஜினிக்காக விலகிய அர்ஜுன மூர்த்தி பாஜகவுக்குத் திரும்பினார்

சென்னை: எல்.முருகன் பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது பாஜக அறிவு சார் பிரிவு மாநிலத் தலைவ ராக இருந்தவர் அர்ஜுன மூர்த்தி. நடிகர் ரஜினி

காந்த் தொடங்கவிருந்த கட்சியில் சேருவதற்காக பாஜகவிலிருந்து இவர் விலகினார். ரஜினி தரப்பில் இவருக்கு தலைமை

ஒருங்கிணைப்பாளர் பதவி

வழங்கப்பட்டது. ஆனால், ரஜினி கட்சி எதுவும் தொடங்காத தால் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வந்த அர்ஜுன மூர்த்தி, நேற்று மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவுக்குத் திரும்பினார்.