சென்னை: தமிழ்நாட்டில் 46 ஆண்டு காலம் இல்லாத அளவுக்கு 2021-22ஆம் ஆண்டு நெல் உற்பத்தியும் நெற்பரப்பும் அதிகரித்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-21ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தியான நிலையில், நடப்பாண்டான 2021-22ஆம் ஆண்டில் 1.22 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2014-15ல் 1.20 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. 2021-22ஆம் ஆண்டில் 22.05 லட்சம் ஹெக்டரில் நெல் பயிரிடப்பட்டது என்றும் தெரிவித்துள்ள அரசு, 2000-01ல் 20.08 லட்சம் ஹெக்டரில் நெல் பயிரிடப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.
இதேபோன்று, 2020-21ல் 20.36 லட்சம் ஹெக்டராக இருந்த நெற் பரப்பு நடப்பாண்டில் 22.05 லட்சம் ஹெக்டராக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

