149 இலங்கைத் தமிழர்கள் வருகை

1 mins read
0aa5aa1f-bc2b-4a8b-9ef1-e1b20a97c41c
நான்கு குழந்தைகளுடன் இரு குடும்பங்கள் ஞாயிறன்று தமிழகம் வந்தன. படம்: தமிழக ஊடகம் -

மண்­ட­பம்: பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்கி இலங்கை தவித்­து­வ­ரும் நிலை­யில் கிளி­நொச்­சி­யைச் சேர்ந்த சந்­தி­ர­கு­மார், யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த கிரு­பா­க­ரன் ஆகிய இரு­வ­ரது குடும்­பத்­தி­னர் நான்கு குழந்­தை­க­ளு­டன் தமி­ழ­கம் வந்­துள்­ள­னர்.

தலை­மன்­னா­ரில் இருந்து ஃபைபர் படகு மூலம் தனுஷ்­கோடி வந்த எட்டு இலங்­கைத் தமி­ழர்­கள், ஆட்­டோ­வில் ஏறி மண்­ட­பம் கடல்­துறை காவல் நிலை­யத்­திற்­குச் சென்­ற­னர். அங்கு மத்­திய, மாநில உள­வுத்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­திய பின்­னர் 8 பேரும் மண்­ட­பம் அக­தி­கள் முகா­மில் ஒப்­ப­டைக்­கப்­பட உள்­ள­னர்.

நெருக்­கடி தொடங்­கி­ய­திலிருந்து இலங்­கை­யில் இருந்து தமி­ழ­கத்­திற்கு வந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 149ஆக உயர்ந்­துள்­ளது. அவர்கள் அனைவரும் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.