ஸ்டாலின்: தனித்து இயங்கக்கூடியது தமிழ்

ஸ்டாலின்: தனித்து இயங்கக்கூடியது தமிழ்

2 mins read
1288122e-3000-4506-b99a-bbabf8d495a2
-

சென்னை: சென்னை பெரும்­பாக்­கத்­தில், செம்­மொ­ழித் தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னத்­தின் சார்­பில் மு.கரு­ணா­நிதி செம்­மொழி தமிழ் விரு­து­கள் வழங்­கும் விழா ஞாயிறு மாலை நடை­பெற்­றது. இந்த விழா­வில், கலந்­து­கொண்டு தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உரை நிகழ்த்­தி­னார்.

அப்­போது அவர் கூறு­கை­யில், "பிற மொழி உத­வி­யின்றி தனித்து இயங்­கக்­கூ­டி­யது தமிழ் மொழி. 3,000 ஆண்டு பழமை வாய்ந்த தமி­ழுக்கு செம்­மொழி என்ற கவு­ர­வத்­தைப் பெற்­றுத் தந்தது திமுக அர­சு­தான்.

"'கலை­ஞர் மு.கரு­ணா­நிதி செம்­மொழி அறக்­கட்­டளை' வாயி­லாக ஆண்­டு­தோ­றும் தமி­ழ­றி­ஞர்­க­ளுக்கு செம்­மொழி விருது வழங்­கப்­பட்டு வரு­கிறது. இவ்­வி­ருது இந்­தி­யா­வி­லேயே மிக அதி­க­ள­வாக ரூ.10 லட்­சம் பரி­சுத்­தொ­கை­யும் பாராட்­டுச் சான்­றி­த­ழம் கருணா­நி­தி­யின் உரு­வம் பொறித்த நினை­வுப்­ப­ரி­சும் அடங்­கி­யது," என்­றார்.

முன்­னாள் துணை­வேந்­தர் முனை­வர் மா.ராசேந்­தி­ரன், பேரா­சி­யர் முனை­வர் க.நெடுஞ்­செ­ழி­யன், பிரெஞ்சு நாட்­டின் அறி­ஞர் ழான் லூய்க் செவ்­வி­யார் ஆகி­யோ­ருக்கு கலை­ஞர் மு.கரு­ணா­நிதி செம்­மொழி தமிழ் விரு­து­களை தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வழங்­கி­னார்.

'நிறைய சம்­ப­வங்­கள்

செய்­யப்­போ­கி­றோம்'

'சென்னை நாள்' கொண்­டா­டப்­

ப­டு­வதை ஒட்டி தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் டுவிட்­டர் செய்தி ஒன்றை வெளி­யிட்­டார். அதில் அவர், "பிரிட்­டிஷ் ஆட்­சி­யா­ளர்­கள் கட்­ட­மைத்த மெட்­ராஸை சென்­னை­யாக்­கி­ய­வர் கரு­ணா­நிதி. சென்­னைக்கு இப்­போது 383வது பிறந்­த­நாள். திரா­விட மாடல் ஆட்­சிக் காலத்­தின் திட்­டங்­க­ளுக்கு சென்னை ஒரு முன்­னு­தா­ர­ணம். இப்­போது நீங்­கள் பார்க்­கும் இந்த நவீன சென்­னையை வடி­வ­மைப்­ப­தில் மேய­ராக இருந்த என் பங்­க­ளிப்­பும் இருக்­கிறது என்­ப­தில் பெருமை. நீங்­கள் எதிர்­பார்க்­கும் இன்­னும் நிறைய சம்­ப­வங்­களை செய்­யப்­போ­கி­றோம், காத்­தி­ருங்­கள்," என்று பதி­விட்­டுள்­ளார்.