சேலத்தில் சொகுசுப் பேருந்து, கார் மோதி விபத்து: 11 வயதுச்சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழப்பு

சேலத்தில் சொகுசுப் பேருந்து, கார் மோதி விபத்து: 11 வயதுச்சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழப்பு

2 mins read
256056e7-2a87-4ec1-93c5-06b67af03fe3
-

சேலம்: சொகு­சுப் பேருந்து மீது கார் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தில் 11 வய­துச் சிறுமி உட்­பட ஆறு பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர்.

இந்­தக் கோர விபத்து நேற்று முன்­தி­னம் சேலம் அருகே நிகழ்ந்­துள்­ளது.

சேலம் மாவட்­டத்­தில் உள்ள ஓட்­டம்­பாறை பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் இரவு கார் ஒன்று சென்று கொண்­டி­ருந்­தது. அப்போது புற­வழிச்­சா­லை­யின் வழி­யாக சேலத்­தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனி­யார் சொகு­சுப் பேருந்து ஒன்று அந்­தக் கார் மீது மோதியது.

இரு வாக­னங்­களும் நேருக்கு நேர் மோதிக் கொண்­ட­தில், காரில் பய­ணம் செய்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த நான்கு பெண்­கள் உள்பட ஆறு பேர் உயி­ரி­ழந்தனர். தன்ஷிகா என்ற 11 வயதுச் சிறுமி­யும் பலியானது அப்­ப­கு­தி­யில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்த விபத்­தில் பலத்த காயம் அடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்­சைக்­காக சேலம் மருத்­துத்­து­வ­மனைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­னர். விபத்து குறித்து காவல்­து­றை­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வருகின்­ற­னர்.

இதற்­கி­டையே கொடைக்­கானல் அருகே சுற்­றுலாப் பேருந்து பள்­ளத்­தில் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னது. எனி­னும் அதில் இருந்த பய­ணி­கள் அனை­வ­ரும் உயிர் பிழைத்­த­னர்.

குஜ­ராத் மாநி­லத்தைச் சேர்ந்த நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட சுற்­றுலாப் பய­ணி­கள் கர்­நா­டகா வழி­யாக சுற்றுலாப் பேருந்து மூலம் அண்மை­யில் கொடைக்­கா­னல் வந்­த­னர்.

பல்­வேறு இடங்­க­ளைச் சுற்­றிப் பார்த்த பின்­னர் நேற்று காலை ஊர் திரும்ப வேண்­டும் என்­பது அவர்­க­ளின் திட்­ட­மா­கும்.

அதன்­படி அனை­வ­ரும் பேருந்­தில் சென்று கொண்­டி­ருந்­த­போது, 'டம்­டம்' பாறை என்ற பகு­தி­யில், அப்­பே­ருந்து ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து தாறு­மா­றாக ஓடியது. பின்­னர் சாலை­யோர பள்­ளத்­தில் அது கவிழ்ந்­தது.

நல்­ல­வே­ளை­யாக, அந்­தப் பள்­ளத்­தில் அதிக அள­வில் மரங்கள் வளர்ந்து காணப்­ப­டு­வ­தால் பேருந்து கீழே விழ­வில்லை. மரங்­களுக்கு இடை­யில் சிக்­கித் தொங்­கிய பேருந்­தில் இருந்த பயணி­கள், அதன் பின்­பக்க கண்­ணாடியை உடைத்து வெளி­யே­றி­னர். விபத்து குறித்து தக­வல் அறிந்த அப்­பகுதி பொது­மக்­கள் விரைந்து வந்து பயணி­கள் பேருந்தை விட்டு வெளியேற உத­வி­னர்.