சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் திரையுலகத்தினர் மத்தியில் பரபரப்பும் கவலையும் நிலவி வருகிறது.
தமிழ்த் திரையுலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய மூத்த படைப்பாளியான அவர், அண்மையில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் சில தினங்கள் சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

