தீர்க்கப்படாத கோரிக்கைகள் குறித்து முதல்வர் கடிதம்

தீர்க்கப்படாத கோரிக்கைகள் குறித்து முதல்வர் கடிதம்

2 mins read
9b951fbd-71cf-4d53-8693-2a48c221961b
-

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம்; விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர்­களும் தங்­கள் தொகு­தி­யில் நீண்ட கால­மாக தீர்க்­கப்­ப­டாத பத்து கோரிக்­கை­களைத் தெரி­விக்க வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கேட்­டுக்கொண்­டுள்ளார்.

இது தொடர்­பாக அனைத்து எம்­எல்­ஏக்­க­ளுக்­கும் அவர் கடி­தம் எழுதி உள்­ளார். அதில், பத்து முக்­கி­ய­மான கோரிக்­கை­களை முன்­னு­ரி­மைப்­ப­டுத்தி பட்­டி­யல் அனுப்ப வேண்­டும் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

அடுத்த 15 நாள்­க­ளுக்­குள் இந்தப் பட்­டி­யலை அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யருக்கு அனுப்பி வைக்க வேண்­டும் என­வும் ஆட்சி­ய­ரின் ஒப்­பு­த­லைப் பெற்ற பின்­னர் கோரிக்­கை­கள் ஒவ்­வொன்­றாக நிறை­வேற்­றப்­படும் என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

"அத்­தி­யா­வ­சிய திட்­டங்­களை அனைத்து சட்­டப்­பே­ர­வைத் தொகுதி­க­ளி­லும் நடை­மு­றைப்­படுத்­தக்கூடிய வாய்ப்பை 'உங்­கள் தொகு­தி­யில் முதல் அமைச்­சர்' திட்­டம் உரு­வாக்­கித் தந்­துள்­ளது.

"இத்திட்­டத்­தின் கீழ், ஒவ்­வொரு தொகு­தி­யி­லும் நீண்ட நாள்­க­ளாக நிறை­வேற்­றப்­படாத கோரிக்கைகள் குறித்து எம்எல்ஏக்களின் பரிந்துரை­களைப் பெற்று மாவட்ட ஆட்­சி­யர் உள்­ளிட்ட அதி­கா­ரி­களு­டன் இணைந்து பரி­சீ­லித்து ஒப்­பு­தல்கள் வழங்­கப்­பட உள்­ளன," என்று முதல்­வர் ஸ்டா­லின் தமது கடி­தத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர்­கள் அளிக்­கும் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்ள மிக முக்­கி­ய­மான திட்­டங்­கள் முதற்­கட்­ட­மாக அடை­யா­ளம் காணப்­படும் என்­றும் தற்­போது நடை­மு­றை­யில் உள்ள அரசு திட்டங்­க­ளின் கீழ் செயல்­ப­டுத்த இய­லாத திட்­டங்­களை முன்­னுரிமை அடிப்­படை­யில் நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் முதல்­வர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

எதிர்க்­கட்சி எம்­எல்­ஏக்­க­ளின் தொகு­தி­க­ளி­லும் முக்­கிய திட்­டங்­களை நிறை­வேற்­றும் வகை­யில் முதல்­வர் கடி­தம் அனுப்பி உள்­ளதை அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் பாராட்டி உள்­ள­னர்.