அரசு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழில்தான் எழுத வேண்டும்

அரசு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழில்தான் எழுத வேண்டும்

2 mins read
62e54167-caf5-4806-b0f2-d8585fda603d
-

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள பள்ளி, கல்­லூரி மாண­வர்­கள் இனி தங்­கள் பெயரை எழு­தும்­போது முன்­னெ­ழுத்­தை­யும் (இனி­ஷி­யல்) தமி­ழில்­தான் குறிப்­பிட வேண்­டும் என அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும், கையொப்­ப­மி­டும் சூழ்­நிலை­கள் அனைத்­தி­லும் தமிழ் முன்­னெ­ழுத்­து­டனே கையொப்பமிட வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே தமி­ழக அரசு இது தொடர்­பான அர­சா­ணையை வெளி­யிட்­டி­ருந்­தது.

அதில் தமி­ழக முதல்­வர் தொடங்கி கடை­நிலை ஊழி­யர்­கள் வரை அனைத்து அரசு அலு­வலர்­கள், பணி­யா­ளர்­கள், பொது­மக்­கள் தமி­ழி­லேயே கையொப்­பம் இட­வும் அதில் முன்­னெ­ழுத்­தை­யும் (இனி­ஷி­யல்) தமி­ழி­லேயே எழுத வேண்­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், மாண­வர்­க­ளின் தொடக்க கல்வி முதல் கல்­லூ­ரிக் காலம் வரை தமிழ் மொழிக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் பொருட்டு தமிழை முதன் முத­லில் மாண­வர்­களது பெய­ரில் சேர்ப்­பது சிறப்­பா­ன­தாக அமை­யும் என சமூக ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்தி இருந்­த­னர்.

"பள்ளி, கல்­லூரி மாண­வர்­கள் இடையே தமி­ழில் பெயர் எழு­தும்­போது அதன் முன்­னெ­ழுத்­தை­யும் தமி­ழில் எழு­தும் நடை­மு­றையை அன்­றாட வாழ்­வில் கொண்டு வர வேண்­டும். இதற்கு மாண­வர்­கள் பள்­ளிக்குச் சேர அளிக்­கும் விண்­ணப்­பம், வரு­கைப் பதி­வேடு, பள்ளி, கல்­லூரி முடித்து பெறும் சான்றி­தழ் வரை முன்­னெ­ழுத்­து­டன் வழங்கும் நடை­மு­றையைக் கொண்டுவர­வேண்­டும். மேலும் மாண­வர்­கள் கையொப்­ப­மி­டும் சூழ்­நி­லை­கள் அனைத்­தி­லும் தமிழ் முன்­னெ­ழுத்­து­டனே கையொப்­ப­மிட அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது," என அர­சா­ணை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து, இந்த அரசா­ணையை மேற்­கோள் காட்டி தமிழக பள்ளி கல்வி ஆணை­யர் அனைத்து மாவட்ட கல்வி அதி­கா­ரி­க­ளுக்­கும் முதன்மை கல்வி அதி­கா­ரி­க­ளுக்­கும் சுற்­ற­றிக்கை ஒன்றை அனுப்பி உள்­ளார்.

அதில், மாணவ மாண­வி­யர், தங்­கள் பெயரை எழு­தும்­போது அதன் முன்­னெ­ழுத்­தை­யும் தமிழிலில்­தான் எழுத வேண்­டும் என்­றும் பதி­வே­டு­க­ளி­லும் அதைப் பின்­பற்­ற­வேண்­டும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

இந்த நடவடிக்கையை தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.