தமிழ்நாட்டு அரசாங்கம் 'எல்ஜிபிடி' எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபாலினர், திருநங்கைகள் ஆகியோர் தொடர்புடைய சொற்களை ஒரு கையேடாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
தமிழ்நாட்டில் உள்ள எல்ஜிபிடி சமூகத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்தும் விதத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சில தீர்ப்புகளை அண்மையில் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது. எல்ஜிபிடி சமூகத்தினரை பற்றி பேசும்போது தரைகுறைவான சொற்களை பயன்படுத்தும் போக்கை நிறுத்த ஒரு கையேடு வெளியிடுமாறு உயர் நீதிமன்ற தமிழக அரசை கேட்டுக்கொண்டது.
திருநம்பி, பால் புதுமையர், ஊடுபால் போன்ற பல சொற்கள் இந்த கையேட்டில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல எல்ஜிபிடி சமூகத்தினர் இதை வரவேற்றுள்ளனர்.
பரதக் கலைஞரும் தமிழ்நாட்டு மாநில திட்டக் குழு உறுப்பினருமான நர்த்தகி நடராஜ் இந்தக் கையேட்டை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். "திருநங்கை எனும் சொல் பிரபலம் அடைந்ததோடு, அது ஒரு திருநங்கையை மரியாதையுடன் அழைக்கும் சொல்லானது. இதுபோன்ற சொற்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். எல்ஜிபிடி சமூகத்தினரை அவதூறாக அழைப்பது நிறுத்தப்படவேண்டும்." கையேட்டில் உள்ள பல சொற்கள் சில ஊடகங்கள், தனிநபர்கள் ஆகியோர் முன்னதாக வெளியிட்டவை. அவற்றில் சில வார்த்தைகளுக்கு தமிழக அரசு திருத்தங்கள் செய்துள்ளது.
கையேட்டை இந்கப் இணையப் பக்கத்தில் பெற்றுகொள்ளலாம்: https://bit.ly/3PUeOgM

