ரூ.20,000 கோடி முதலீடு; 200,000 பேருக்கு வேலை

ரூ.20,000 கோடி முதலீடு; 200,000 பேருக்கு வேலை

2 mins read
34a31fda-7600-4bde-a43f-190b0b430ed8
-

புதிய காலணி, தோல் தொழில்துறை கொள்கையை தமிழக அரசு வெளியிட்டது

சென்னை: தமிழ்­நாடு, காலணி தயா­ரிப்­பில் முன்­ன­ணி­யில் உள்­ளது. இந்­நி­லை­யில் காலணி, தோல் பொருள்­கள் உற்­பத்­தி­யில் மேலும் 20,000 கோடி ரூபாய் முத­லீடு செய்து புதி­தாக 200,000 பேருக்கு வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் வகை­யில் புதிய கொள்­கையை தமி­ழக அரசு வெளி யிட்­டுள்­ளது.

தமிழ்­நாட்­டின் முதல்­வர் மு.க. ஸ்டா­லின், சென்­னை­யில் செவ்­வாய்க்­கி­ழமை மாலை­யில் நடந்த காலணி, தோல் பொருள்­கள் மாநாட்­டில் காலணி, தோல் பொருள்­கள் கொள்கை 2022ஐ வெளி­யிட்­டார்.

பாரம்­ப­ரி­ய­மான தோல் பொருள்­கள், காலணி தயா­ரிப்­பில் தமி­ழ­கம் முன்­னி­லை­யில் இருந்­தா­லும் ரசா­யன செயற்கை இழை மூலம் தயா­ரிக்­கப்­படும் பொருள்­கள் தேசிய அள­வி­லும் உல­க­ள­வி­லும் வளர்ச்சி­ அடைந்து வரு­கிறது.

இந்நிலையில், தோல் பொருள்­களின் அவசியத்தை உல­க­ளா­விய சந்­தை­களில் நிலை­நாட்டி அவற்­றுக்­கான வாய்ப்­பு­களை அதி­கப்­படுத்த சிறப்பு முயற்­சி­கள் தேவை.

இதைக் கருத்­தில் கொண்டு தனிப்­பட்ட புதிய கொள்­கையை உரு­வாக்கி அதன் மூலம் காலணி தயா­ரிப்­புத்­துறை ஏற்­று­மதி துறை­யா­ளர்­க­ளுக்­குச் சிறந்த மாநி­ல­மாக தமி­ழ­கத்தை மேம்ப­டுத்­த­லாம் என்று அரசு நம்­பு­கிறது.

காலணி, தோல் பொருள்­கள் தயா­ரிப்­பில் கூடு­த­லாக ரூ.20,000 கோடி முத­லீட்டை ஈர்ப்­ப­தும் இரண்டு லட்­சம் வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தும் புதிய கொள்­கை­யின் இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

காலணி, தோல் பொருள்­கள் தயா­ரிப்பு தொடர்­பான குழு­மங்­கள், பூங்­காக்­கள், பொது­வான வச­திகள் என கட்­ட­மைப்பு வச­தி­க­ள் ­ஏற்­படுத்­தப்படும்.

தோல் இல்­லாத கால­ணி­கள் தயாரிப்புக்கான கட்­ட­மைப்பு வசதி­களை உரு­வாக்கி சார்பு தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு அரசு உத­வும். திறன் பயிற்சித் திட்­டங்­கள் மூலம் திறன் வாய்ந்த தொழி­லா­ளர்­கள் உருவாக்கப்படும்.

காலணி மற்­றும் தோல் பொருள்­கள் உற்­பத்தி தொழிலை எளி­தா­க­தொ­டங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­களை புதிய கொள்கை மேம்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.