காட்டெருமையை வேட்டையாடி கறியை கொடியில் காயப்போட்டனர்

காட்டெருமையை வேட்டையாடி கறியை கொடியில் காயப்போட்டனர்

1 mins read
23237e65-a95e-4d2e-860a-e57bbb81a824
கொடியில் காய்ந்துகொண்டிருந்த காட்டு எரு­மைக் கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். படம்: தமிழக ஊடகம் -

திரு­வண்­ணா­மலை: திருவண்­ணா­மலை மாவட்­டம் செங்­கம் அருகே காட்­டெ­ரு­மையை வேட்­டை­யாடி வீட்­டில் பதுக்­கிய இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.

செங்­கம் பகு­தி­யைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் வலசை மலைப்­ப­கு­தி­யில் சுற்றி திரிந்த காட்டு எரு­மையை வேட்­டை­யாடி அதனை கூறு போட்டு சுமார் 15 கிலோ கறி­யைத் தங்கள் வீட்­டில் காய வைத்­தி­ருப்­ப­தாக வனத்­துறை அலு­வ­லர்­க­ளுக்கு முன்­ன­தாக தக­வல் கிடைத்­தது.

அதனை அடுத்து அதி­கா­ரி­கள் திடீர் சோத­னை­யைத் தொடங்­கினர். அப்­போது ஒரு வீட்­டில் துணியைக் காய வைப்­பது போல் கொடி­யில் காட்­டெ­ருமை கறி காய்ந்­து­கொண்டு இருந்­த­தைக் கண்டு அவர்கள் திடுக்­கிட்­ட­னர்.

அவற்றை அதி­கா­ரி­கள் பறி­முதல் செய்­த­னர். இந்­நி­லை­யில், தாங்­கள் காய­வைத்த கறியை அதி­கா­ரி­கள் பார்த்­து­விட்­ட­தைத் தெரிந்து கொண்ட ராயர், ஜெயபாலன் என்ற இரண்டு பேரும் எங்கோ ஓடிப்போய் விட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிந்து அதிகாரிகள் அவர்களைத் தேடிவருகின்றனர்.