வேலூர்: பரிதா குழுமம், கே.எச்.இந்தியா குழுமம் ஆகிய இரு குழுமங்களுக்குச் சொந்தமான தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களின் 62 இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது. 250க்கு மேற்பட்ட வருவமான வரித்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பரிதாஷூஸ், பரிதா லெதர் வார் உட்பட 11 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுமம் ஷூ, பெல்ட், கைப்பை என பல்வேறு தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிறுவனம் வருவாயை முறையாகக் கணக்குக் காட்டவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பரிதா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களிலும் சோதனையை முடுக்கிவிட்டுள்ளனர்.

