சாகித்ய விருதுகளுக்கு இளம் எழுத்தாளர்கள் தேர்வு

சாகித்ய விருதுகளுக்கு இளம் எழுத்தாளர்கள் தேர்வு

1 mins read
2fa49778-2d53-46c1-b99d-a029ceb71cdc
-

சென்னை: இந்­தி­யா­வில் 24 மொழி­களில் வெளி­யா­கும் சிறந்த இலக்­கிய படைப்­பு­க­ளுக்கு சாகித்ய அகா­டமி விரு­து­கள் ஆண்­டு­தோ­றும் வழங்­கப்­ப­டு­கின்­றன. இதே­போல் இளை­ஞர்­க­ளின் சிறந்த படைப்­பு­க­ளுக்­கும் சிறு­வர்­க­ளுக்­காக எழு­தப்­படும் சிறந்த படைப்­பு­க­ளுக்­கும் சாகித்ய அகா­டமி விருது வழங்­கப்­ப­டு­கிறது.

இவ்­வி­ருது பெறு­ப­வர்­க­ளுக்கு ரூ.50 ஆயி­ர­மும் செப்­புப்­பட்­ட­ய­மும் பரி­சாக அளிக்­கப்­படும். பரி­ச­ளிப்பு விழா நவம்­பர் 14ஆம் தேதி டெல்­லி­யில் நடை­பெ­று­கிறது.

இந்த நிலை­யில் 2022ஆம் ஆண்­டுக்­கான விரு­து­கள் அறி­விக்­கப்­பட்­டன. தமிழ் மொழிக்­கான 2022ம் ஆண்டு சாகித்ய அகா­டமி சிறு­வர் அல்­லது சிறு­வர் படைப்­புக்­கான விருது 'மல்­லி­கா­வின் வீடு' என்ற சிறு­க­தைக்­காக எழுத்­தா­ளர் ஜி.மீனாட்­சிக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 2022ஆம் ஆண்­டுக்­கான இளை­ஞர்­க­ளுக்­கான சாகித்ய அகா­டமி விருது, 'தனித்­தி­ருக்­கும் அர­ளி­க­ளின் மதி­யம்' என்ற கவிதை தொகுப்­புக்­காக, எழுத்­தா­ளர் காளி­முத்­து­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.