'சட்டவிரோத செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது அதிகரித்துள்ளது'

'சட்டவிரோத செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது அதிகரித்துள்ளது'

1 mins read
886cecec-9c56-46d1-ac18-8977c8a412b3
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்குப் பரிமாறப்படும் உணவை ஆய்வுசெய்த சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்களுக்கு தன் கையாலேயே அன்புடன் உணவு பரிமாறி மகிழ்ந்தார். படம்: திஇந்து -

குழந்­தை­களை சட்­டத்­துக்கு முர­ணான செயல்­களில் ஈடு­ப­டுத்­து­வது அதி­க­ரித்து வரு­வ­தாக சமூக நலன் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­துறை அமைச்­சர் கீதா ஜீவன் கவலை தெரி­வித்­துள்­ளார்.

கோயம்­புத்­தூர் ரேஸ்­கோர்­ஸில் உள்ள மாநில நீதித்­துறை பயிற்சி நிலை­யத்­தில், குழந்­தை­கள் நல காவ­லர்­க­ளுக்­கான சட்ட விழிப்­பு­ணர்­வுப் பயிற்­சியை நேற்று முன்­தி­னம் தொடங்­கி­வைத்து அமைச்­சர் கீதா ஜீவன் உரை­யாற்­றி­னார். அப்­போது, "கூர்­நோக்கு இல்­லத்­தில் உள்ள குற்­றம் சாட்­டப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு பிடித்த மாதி­ரி­யான பயிற்சி வழங்­கப்­ப­டு­கிறது. குறிப்­பாக, வேலூர் கூர்­நோக்கு இல்­லத்­தில் உள்ள குழந்­தை­கள் இசைக் கரு­வி­கள் வாசிப்­பது, யோகா உள்­ளிட்­ட­வற்றை கற்று வரு­கின்­ற­னர்.

குழந்­தை­கள் தொடர்­பான வழக்­கு­க­ளைக் கையா­ளும்­போது குழந்­தை­நேய எண்­ணத்­தோடு, அவர்­க­ளின் எதிர்­கா­லம் பாதிக்­கா­மல் அணு­க­வேண்­டும்.

"இதற்கு நீதித்­து­றை­யும் காவல்­து­றை­யும் இணைந்து செயல்­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார். அப்­போதுதான் அந்­தக் குழந்­தை­கள் நல்ல குடி­ம­க்களாக மாற வாய்ப்­புக்­கி­டைக்­கும்," என்­றார்.