காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகல்

2 mins read
86b739f6-0393-4b31-8fd6-ef4b0c823b14
குலாம் நபி ஆசாத் (படம்) தனது உண்மை முகத்தை வெளிக்காட்டி துரோகம் செய்து விட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்து உள்ளார். படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான குலாம் நபி ஆசாத் கட்­சி­யி­லி­ருந்து விலகு வதாக நேற்று அறி­வித்­தார்.

கட்­சி­யில் இருந்த ஆலோ­சனை அமைப்பை ராகுல் காந்தி நாச­மாக்கிவிட்­ட­தாகவும் அவர் குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.

இதன் தொடர்­பில் ஐந்து பக்க கடி­தத்­தை­யும் சோனி­யா­வுக்கு அவர் அனுப்­பி­யுள்­ளார்.

2014ல் நடந்த தேர்­த­லில் இருந்து காங்­கி­ரஸ் கட்சி தொடர்ந்து தோல்வி­களைச் சந்­தித்து வரு­கிறது. கட்­சி­யில் அனைத்து நிலை களி­லும் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வலி­யு­றுத்தி குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்­ளிட்ட 23 மூத்த தலை­வர்­கள் கட்­சித் தலை­வர் சோனி­யா­வுக்கு கடி­தம் எழு­தி­னர்.

இதை­ய­டுத்து 'ஜி23' என்று அழைக்­கப்­பட்ட இவர்கள் ஓரங்­கட்­ட­பட்டதா­கக் கூறப்­பட்­டது. மூத்த தலை­வர்­க­ளாக இருந்­தா­லும் இவர் ­க­ளால் காங்­கி­ரஸ் கட்­சிக்கு வாக்கு ­க­ளைப் பெற்று கட்­சியை உய­ரத்­துக்­குக் கொண்டு வர முடி­யுமா என்­பது சந்­தே­கமே. இவர்­கள், தேர்­த­லின்­போது தீவிரப் பிர­சா­ரத்­தி­லும் ஈடு­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

இந்த நிலை­யில் கட்­சிக்கு நிரந்­தரத் தலை­மையை இவர்­கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்தனர்.

ஜம்மு - காஷ்­மீ­ரில் காங்­கி­ரஸ் தேர்­தல் பிர­சா­ரக்குழுத் தலை­ வராக, அதி­ருப்­தி­யா­ளர் குழு­வைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் அண்­மை­யில் நிய­மிக்­கப்­பட்­டார்.

ஆனால், சில மணி நேரங்­க­ளி­லேயே அந்­தப் பொறுப்பை ஏற்­கத் தயா­ராக இல்லை என்று குலாம் நபி ஆசாத் அறி­வித்­தார்.

பொறுப்பைக் கொடுத்­தா­லும் ஏற்­கா­மல் தட்­டிக் கழித்து காங்­கி­ரஸ் தலைமையை குறை­கூ­று­வ­தாக இவர் மீது கட்­சித் தொண்­டர்­கள் குற்­றம் சாட்­டி­னர்.

இதை­ய­டுத்து காங்­கி­ரஸ் கட்­சி ­யின் அடிப்­படை உறுப்­பி­னர் உள்­ளிட்ட அனைத்து பத­வி­களில் இருந்­தும் வில­கு­வ­தாக குலாம் நபி ஆசாத் அறி­வித்­துள்­ளார். இதற்­கான கடி­தத்தை கட்சி தலை­வர் சோனி­யா­வுக்கு அனுப்பி வைத்­துள்­ளார். ஐந்து பக்­கங்­கள் கொண்ட அந்த கடி­தத்­தில் கட்­சி­யில் சேர்ந்­தது முதல் தனது பணி, செயல்­பா­டு­கள், முன்­னாள் பிர­த­மர்­கள் இந்­திரா, ராஜீவ் ஆகி­யோ­ரு­டன் பணி­யாற்­றி­யது குறித்­து விளக்­கி­உள்ள குலாம் நபி ஆசாத், ராகு­லின் செயல்­பா­டு­கள் குறித்து கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளார்.

அவ­ரின் குழந்­தைத்­த­ன­மான செயல்­பா­டு­களே 2014ஆம் ஆண்டின் தேர்­தல் தோல்­விக்கு கார­ணம் என்று கூறி­யுள்­ளார்.

காங்­கி­ர­சில் இருந்து முன்­னாள் மத்­திய அமைச்­சர் ஜோதி­ரா­தித்யா சிந்­தியா, முன்­னாள் மத்­திய அமைச்­சர் கபில் சிபல், குஜ­ராத் செயல் தலை­வ­ராக இருந்த ஹர்­திக் படேல் பஞ்­சாப் முன்­னாள் முதல்­வர் அம­ரீந்­தர் சிங், பஞ்­சாப் மாநில காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் சுனில் ஜாக்­கர் ஆகி­யோர் வில­கிய நிலை­யில் தற்­போது குலாம் நபி ஆசாத்தும் கட்­சி­யில் இருந்து வில­கி­யது சோனி­யா­வுக்கு தலை­வ­லியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதற்கிடையே குலாம் நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.