மாணவி மர்ம மரணம் வழக்கு; பள்ளி நிர்வாகிகளுக்கு பிணை

2 mins read
1452d61d-0035-4921-bc4a-aad1235437a3
மர்மமான முறையில் மரண மடைந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி.பள்ளி நிர்வாகிகள் ரவிக்குமார், சாந்தி. படங்கள்: கோப்புப் படம் -
multi-img1 of 2

கள்ளக்குறிச்சி: இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகளை பிணையில் விடுவிக்க உயர் நீதி மன்றம் நேற்று அனுமதி அளித்தது.

ஐவரும் பிணை கேட்டு கோரிய மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமாக மரணமடைந்தார்.

மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதன் தொடர்பில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய ஐவரும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்­வ­ழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்­துறை விசாரித்து வருகிறது.

கைது செய்­யப்­பட்ட ஐவ­ரும் பிணை கேட்டு தாக்­கல் செய்த மனுவை விழுப்­பு­ரம் மக­ளிர் சிறப்பு நீதி­மன்­றம் கடந்த வாரம் தள்­ளு­படி செய்தது.

இதை­ய­டுத்து பிணை கேட்டு பள்­ளி­யின் தாளா­ளர் ரவிக்­கு­மார், செய­லா­ளர் சாந்தி, பள்ளி முதல்­வர் சிவ­சங்­க­ரன், வேதி­யி­யல் ஆசி­ரியை ஹரிப்­பி­ரியா, கணித ஆசி­ரியை கீர்த்­திகா ஆகிய 5 பேரும் சென்னை உயர்­ நீ­தி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­த­னர்.

இந்த மனுக்­களை நீதி­பதி ஜி.கே.இளந்­தி­ரை­யன் முன்பு விசா­ர­ணைக்கு வந்­தது.

"மனு­தா­ரர்­கள் எதற்­காக கைது செய்­யப்­பட்­டார்­கள் என்ற கார­ணத்தை காவல்­துறை தெரி­விக்க வேண்­டும். இல்­லை­யென்­றால் விசா­ரணை அதி­கா­ரி­கள் முன்­னி­லை­யாக உத்­த­ர­விட நேரி­டும்," என்று எச்­ச­ரித்து வழக்கு விசா­ர­ணையை வெள்­ளிக்­கி­ழ­மைக்கு ஒத்தி வைத்தார்.

இந்த நிலை­யில் இந்த வழக்கு நேற்று மீண்­டும் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது, கள்­ளக்­கு­றிச்சி கனி­யா­மூர் பள்ளி நிர்­வா­கி­கள் மூன்று பேர், ஆசி­ரி­யை­கள் இரு­வ­ருக்கு சென்னை உயர் நீதி­மன்­றம் பிணை வழங்­கி­யது.

பள்ளி முதல்­வர் சிவ­சங்­க­ரன், தாளா­ளர் ரவிக்­கு­மார், செய­லா­ளர் சாந்­தியை நீதி­பதி இளந்­தி­ரை­யன் பிணை­யில் விடு­விக்க உத்­த­ர­விட்­டார்.

மாணவி மரண வழக்­கில் சிபி­சி­ஐ­டி­யால் கைதான வேதி­யி­யல் ஆசி­ரியை ஹரிப்­பி­ரியா, கணித ஆசி­ரியை கீர்த்­தி­கா­வுக்­கும் பிணை வழங்கி சென்னை உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.