கோல்கத்தா: அன்னை தெரசாவின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு கோல்கத்தாவில் உள்ள அன்னை இல்லத்தில் ஏராளமான கன்னி யாஸ்திரிகள் பாடல்களைப் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பேராயர் தாமஸ் டசவுசா, அன்னை தெரசா குறித்து போப் பிரான்சிஸ் குறிப்பிட்டு இருந்ததை நினைவு கூர்ந்தார். ஆறுகள் தனது நீரை குடிப்பதில்லை. மரங்கள் தங்களது கனிகளை உண்பதில்லை, சூரியன் தனக்கே வெளிச்சம் கொடுப்பது இல்லை, பூக்கள் தங்களுக்கு மட்டும் நறுமணம் வீசவில்லை. மற்ற வர்களுக்காக வாழ்வதே இயற்கை யின் நியதி. இதன்படி வாழ்ந்தவர் அன்னை தெரசா, ஏழை மக்களை காக்கவும் ஏழை மக்கள் உயர வேண்டும் என்பதற்காகவே வாழ்ந்த வர் அன்னை தெரசா என போப் பிரான்சிஸ் கூறியதை பேராயர் தாமஸ் டசவுசா சுட்டிக்காட்டினார்.
படம்: இந்திய ஊடகம்

