சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 31ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடு களும் முழுவீச்சில் நடந்து வரு கின்றன.
இந்த நிலையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற் படுத்தாத மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறை யில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன் படுத்தும், தெர்மாகோலால் ஆன பொருட்களை அனுமதிக்கக்கூடாது. சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சென்னையில் காசிமேடு, பட்டினப்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் ஆகிய இடங்களில் மட்டுமே சிலை களைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு பணியில் 20,000 காவலர்கள் நிறுத்தப்படவிருக்கின்றனர்.

