9 தமிழக மீனவர்களை இலங்கை விடுவித்தது

9 தமிழக மீனவர்களை இலங்கை விடுவித்தது

1 mins read
3c0ce96a-bb15-4025-9741-60aaa07d2339
-

சென்னை: தமி­ழக மீன­வர்­கள் ஒன்­பது பேரை விடு­விக்க இலங்கை திரி­கோ­ண­மலை நீதி மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து விடு­தலை செய்­யப்­பட்ட ஒன்­பது பேரும் ஓரிரு நாட்­களில் விமா­னம் மூலம் இந்­தி­யா­வுக்கு அனுப்பி வைக்­கப் படு­வார்­கள் என எதிர்­பார்க்­கப் படு­கிறது

நாகை, தமி­ழ­கத்தை சேர்ந்த மீன­வர்­களை எல்­லைத் தாண்டி மீன்­பி­டித்­த­தாக கூறி இலங்கை கடற்­ப­டை­யி­னர் சிறை­பி­டிக்­கும் சம்­ப­வம் தொடர்ந்து நடந்து வரு­கிறது. தமி­ழக மீன­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டும் என்று மீன­வர்­கள் கோரிக்கை விடுத்து வரும் நிலை­யில், இது­வரை எந்­த­வித பய­னும் இருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

இந்த நிலை­யில் நாகை துறை­மு­கத்­தில் இருந்து கடந்த 10ஆம் தேதி மீன் பிடிக்­கச் சென்ற ஒரு பட­கை­யும் அதி­லி­ருந்த 9 மீன­வர் களை­யும் எல்­லைத் தாண்டி மீன் பிடித்­த­தா­கக் கூறி இலங்கை கடற்­ப­டை­யி­னர் கைது செய்து திரி­கோ­ண­மலை சிறை­யில் அடைத்­த­னர். மீன­வர்­க­ளின் வழக்கு நேற்று திரி­கோ­ண­மலை யில் விசா­ர­ணைக்கு வந்­தது.

வழக்கை விசா­ரித்த நீதி­பதி மீன­வர்­களை நிபந்­த­னை­க­ளு­டன் விடு­தலை செய்ய உத்­த­ர­விட்­டார்.