40 கைதிகளுக்கு விடுதலை

40 கைதிகளுக்கு விடுதலை

1 mins read
63571686-3599-4812-b1f2-4655a9ad1d05
-

சென்னை: தமி­ழக முன்­னாள் முதல்­வர் அண்­ணா­வின் 113வது பிறந்­த­நாளை முன்­னிட்டு நீண்ட காலம் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரும் கைதி­கள் மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்­கள் என்று முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அண்­மை­யில் அறி­வித்து இருந்­தார். மேலும் 75வது சுதந்­திர தினத்­தை­யொட்டி, நீண்­ட­கா­லம் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரும் கைதி­களை விதி­மு­றைக்­குட்­பட்டு விடு­தலை செய்­ய­லாம் என மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய அரசு அறிவுறுத்­தி­யது. இதன்­படி, தமி­ழக அரசு ஒப்­பு­தல் வழங்­கி­யதையடுத்து தற்­போது 40 கைதி­கள் நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் விடு­த­லை­யாகி உள்­ள­னர்.