சென்னை: இன்றளவும் மறக்க முடியாத 'வெள்ளையனே வெளி யேறு' என்ற முழக்க வரியை இந்திய வரலாற்றில் முதன்முதலில் முழங்கிய பூலித்தேவன் சிலைக்கு செப்டம்பர் 1ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
வீர உணர்ச்சியும், இறை உணர்வு மிகுந்த மாமன்னன் பூலித் தேவனின் 307வது பிறந்தநாள் வருகிற 1ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இதையொட்டி எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாமன்னன் பூலித்தேவனின் 307வது பிறந்தநாளான செப்டம்பர் 1ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தென்காசி மாவட்டம், வாசுதேவ நல்லூர் நெற்கட்டும் செவல் என்ற இடத்தில் அமைந்து உள்ள பூலித்தேவன் சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

