காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

2 mins read
c748be6d-30ca-47d6-82a9-2d391b1ca42e
கடந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கின. கோப்புப்படம்: ஊடகம் -

மதுரை: காவிரி நீர்ப்­பி­டிப்­புப் பகு­தி­களில் தொடர்ந்து கன­மழை நீடித்து வரு­வ­தால் மேட்­டூர் அணைக்­கான நீர்­வ­ரத்து மிக விரை­வில் 1.20 லட்­சம் கன­அ­டி­யாக அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த சில தினங்­க­ளாக தென் மேற்­குப் பரு­வ­மழை மீண்­டும் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இதன் கார­ண­மா­கவே காவிரி நீர்ப்­பி­டிப்­புப் பகு­தி­களில் பலத்த மழை பெய்து வரு­கிறது.

மேட்­டூர் அணைக்கு வந்­து­கொண்­டி­ருக்­கும் நீரின் அளவு படிப்­ப­டி­யாக அதி­க­ரித்­துள்­ள­தால், கடந்த 25ஆம் தேதி முதல் 16 கண் மதகு வழி­யாக உபரி நீர் வெளி­யேற்­றப்­ப­டு­கிறது.

சனிக்­கி­ழமை காலை நில­வ­ரப்­படி, மேட்­டூர் அணைக்­கான நீர்­வரத்து 60,000 கன­அ­டி­யாக இருந்­தது. இது அன்­றைய தினம் மாலை ஐந்து மணி­ய­ள­வில் விநா­டிக்கு 80,000 கன­அ­டி­யாக ஏற்­றம் கண்­டது.

இதை­ய­டுத்து, அன்று இரவு அணை­யில் இருந்து கூடு­தல் தண்­ணீ­ரைத் திறந்­து­வி­டு­வது என முடி­வா­னது. இரவு சுமார் எட்டு மணி­ய­ள­வில் அணை­யில் இருந்து வெளி­யேற்­றப்­படும் நீரின் அளவு விநா­டிக்கு 95,000 கன­அடி­யாக அதி­க­ரிக்­கப்­பட்­டது என பொதுப்­ப­ணித்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில், மேட்­டூர் அணைக்­கான நீர் வரத்து விநா­டிக்கு 1,20,000 கன­அ­டி­யாக அதி­க­ரிக்­கும் என்று மத்­திய நீர்­வள அமைச்சு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. எனவே, உரிய பாது­காப்பு, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என சம்­பந்­தப்­பட்ட மாநி­லங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கிருஷ்­ண­கிரி, தர்­ம­புரி, சேலம், நாமக்­கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்­சா­வூர், நாகப்­பட்­டி­னம் உள்­பட காவிரி கரை­யோர மாவட்­டங்­களில், பாது­காப்பு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என மாநில அர­சும் மாவட்ட அதி­கா­ரி­களை உஷார்­ப­டுத்தி உள்­ளது. தமி­ழ­கத்­தில் உள்ள காவிரி நீர்ப்­பி­டிப்­புப் பகு­தி­க­ளி­லும் கடந்த இரு தினங்­க­ளாக கன­மழை நீடித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தின் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் தற்­போது மழை பெய்து வரு­கிறது. சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் இரவு பல்­வேறு பகு­தி­களில் மழை வெளுத்­துக்­கட்­டி­யது. சாலைகளில் மழை­நீர் தேங்­கி­ய­தால் வாக­ன­மோட்­டி­கள் சிர­மத்­துக்கு ஆளா­கி­னர்.