தடுப்பூசி செயல்பாடு: ஏழாம் இடத்தில் தமிழகம்

தடுப்பூசி செயல்பாடு: ஏழாம் இடத்தில் தமிழகம்

1 mins read
efd6eecd-b2db-4835-9ab3-8d6a671c91cb
-

சென்னை: கொரோ­னா­வுக்­கான கூடு­தல் தடுப்­பூசி (பூஸ்­டர்) போட்­டுக்­கொள்­வ­தில் தமி­ழ­கம் பின்­தங்கி உள்­ளது.

இத­னால் கொரோனா தடுப்­பூசி செயல்­பா­டு­களில் தமி­ழ­கம் ஏழா­வது இடத்­துக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கொரோனா தடுப்­பூசி செலுத்­து­வதை தமி­ழக அரசு ஓர் இயக்­க­மா­கவே செயல்­ப­டுத்தி வரு­கிறது என்­றும் பொது­மக்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தில் மெத்­த­னம் காட்­டக்­கூ­டாது என்­றும் சுகா­தா­ரத்­துறை கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

தொற்று பாதிப்பு குறைந்­துள்­ள­தால் பொது­மக்­க­ளி­டம் தடுப்­பூசி செலுத்­திக்­கொள்­வ­தில் ஆர்­வம் குறைந்­துள்­ளது என்­றும் தொடர்ந்து தடுப்­பூசி குறித்த விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது என்­றும் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தடுப்பூசி செயல்பாட்டில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.