40 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட தமிழ்நாட்டு சிலைகள் கண்டுபிடிப்பு

40 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட தமிழ்நாட்டு சிலைகள் கண்டுபிடிப்பு

1 mins read
ae40b715-bba4-494b-8b1e-a8c8e24d1516
திருடப்பட்ட விநாயகர், தேவி சிலைகள் (படம்: இந்திய ஊடகம்) -

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் திருடப்பட்ட இரண்டு சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த இரு சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டன. அவை இருக்கும் இடங்களை தமிழ்நாட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டறிந்துள்ளது.

பண்ணத்தெரு பரமேஸ்வர சுவாமி கோவிலிலிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு 12 சிலைகள் திருடப்பட்டன. இவற்றில் ஒரு தேவி சிலையும், விநாயகர் சிலையும் அடங்கும். காணாமல்போன சிலைகள் குறித்து அண்மையில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி தேவி சிலை நியூயார்க்கில் உள்ள ஓர் அருங்காட்சியகத்திலும், விநாயகர் சிலை கலிஃபோர்னியாவில் உள்ள அருங்காட்சியகத்திலும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட மேலும் ஆறு சிலைகளை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு எடுத்துவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முயற்சி மேற்கொண்டுவருகிறது. இந்த சிலைகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நரேஸ்வர கோவிலிலிருந்து 1960களில் திருடப்பட்டன.

திருடப்பட்ட சிலைகளின் புகைப்படங்கள் தமிழ்நாட்டில் இருந்ததால் அவற்றை கண்டுபிடிப்பது சற்று எளிதாக இருந்ததாகக் கூறப்பட்டது.

திருடப்பட்ட பெரும்பாலான சிலைகள் சோழக்காலத்தின்போது உருவாக்கப்பட்டன.