அனைவரும் அர்ச்சகராகும் உத்தரவுக்குத் தடை இல்லை

அனைவரும் அர்ச்சகராகும் உத்தரவுக்குத் தடை இல்லை

1 mins read
1717babf-c136-4b13-b2a8-537736070dcc
-

புதுடெல்லி: அனைத்து சாதியினரையும் அர்ச்சக ராக்கும் தமிழக அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

அப்போது தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தரப்பு வலியுறுத்தியது.

"கோவில்களில் அர்ச்ச கர்களை தமிழக அரசு நியமிக்க அனுமதிக்கக் கூடாது. அர்ச்சகர் நிய மனம் தொடர்பான நட வடிக்கைகளை கோவில் நிர்வாகம்தான் மேற் கொள்ள வேண்டும். கோவில் சொத்துகளின் உரிமையாளராக அரசு இருக்கக்கூடாது, சமயம் சார்ந்த செயல்பாடுகளில் அரசு தலையிடக்கூடாது," என்று சுவாமி தரப்பு வலியுறுத்தியது.

வாதங்களை செவி மடுத்த நீதிபதிகள், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.