பத்தாவது தேசிய கடல்சார் தேடுதல், மீட்பு ஒத்திகை சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்திய கடலோரக் காவல் படை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற கடலோரக் காவல்படையினர் 10 கடல் மைல் துாரத்தில், வங்கக்கடல் பகுதியில், நேரடி செயல்முறை ஒத்திகையை மேற்கொண்டனர். கடலோரக் காவல் படையின் சுற்றுக்காவல் படகுகள், ஐந்து சிறிய ரக அதிவேக படகுகள், இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா உட்பட மொத்தம் 17 கப்பல்கள் பங்கேற்றன. அப்போது விபத்து ஏற்பட்டு கடலில் விழுந்து தத்தளிக்கும் விமானப் பயணிகளை மீட்பது போன்ற செயல்முறை ஒத்திகைகளும் நடந்தன.
படம்: ஏஎஃப்பி

