40 ஆண்டுகளாக மழைநீரை மட்டுமே பருகும் தம்பதியர்

40 ஆண்டுகளாக மழைநீரை மட்டுமே பருகும் தம்பதியர்

2 mins read
8d196d09-61e5-42d9-a98e-d023153ef8d4
கோதையான் - ராணியம்மாள் தம்பதியர். படம்: ஊடகம் -

வந்­த­வாசி: கடந்த 40 ஆண்­டு­க­ளாக வந்­த­வாசி பகு­தி­யைச் சேர்ந்த கோதை­யான் (76 வயது), அவ­ரது மனைவி ராணி­யம்­மாள் (72 வயது) ஆகிய இரு­வ­ரும் மழை­நீரை மட்­டுமே பருகி வருகின்றனர்.

தங்­கள் வீட்­டி­லுள்ள கிணற்று நீரையோ, ஆழ்­து­ளைக்­கு­ழாய் நீரையோ இது­வரை பயன்­ப­டுத்­தி­யதே இல்லை என்­கி­றார் திரு கோதை­யான்.

"மழை பெய்­யத் தொடங்­கி­ய­தும் வீட்­டுக்­கூரை மேலுள்ள அழுக்­கு­கள் அனைத்­தும் சில நிமி­டங்­களில் மழைநீரால் அகற்­றப்­பட்­டு­வி­டும்.

"அதன்பின்­னர் வீட்­டில் உள்ள பெரிய அண்­டாக்­கள், சிறு­சிறு பாத்­தி­ரங்­கள் என அனைத்­தி­லும் மழை­நீ­ரைப் பிடித்து வைப்­போம். அடுத்த மழைக்­கா­லம் வரும் வரை பிடித்து வைத்த நீரை வடி­கட்டி காய்ச்சி பயன்­ப­டுத்­து­வோம்," என்­கி­றார் திரு கோதை­யான்.

மழை­நீரை எவ்­வ­ளவு நாள் சேமித்து வைத்­தா­லும் அதில் புழு, பூச்­சி­கள் அண்­டாது என்­றும் மழை­நீரை மட்­டுமே குடிப்­ப­தால் உடல்­நலப் பாதிப்பு எது­வும் இல்­லா­மல், மருத்­து­வர்­களை அணு­கா­மல் வாழ்ந்துவரு­வ­தா­க­வும் இவர் கூறு­கி­றார்.

இந்­தத் தம்­ப­தி­ய­ரைப் பார்த்து, அண்டை வீட்­டா­ரும் மழை­நீ­ரைச் சேமித்து முடிந்­த­வரை அதை மட்­டுமே குடிக்­கத் தொடங்கி உள்­ள­னர். இது தங்­க­ளுக்­குப் பெரும் மகிழ்ச்­சியை அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார் ராணி­யம்­மாள்.

இத்­தம்­ப­தி­ய­ருக்கு இரண்டு மகன்­களும் ஒரு மகளும் உள்­ள­னர். மூவ­ருக்­கும் திரு­ம­ண­மாகி தனித்­த­னியே வசித்து வரு­கின்­ற­னர். 40 ஆண்­டு­களுக்குமுன் கீழச்­ச­மங்­க­லம் கிரா­மத்­தில் வீடு கட்டி குடி­யே­றி­னார் திரு கோதை­யான்.

அன்று முதல் இன்று வரை இரு­வ­ரும் அங்­கே­தான் வசிக்­கின்­ற­னர். புது வீட்­டில் குடி­யே­றிய முதல் நாளில் இருந்தே குடிக்­க­வும் சமை­யல் செய்­ய­வும் மழை­நீரை மட்­டுமே பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­ன­ராம்.

"மழை­நீரை உயிர்­நீர் என்­பர். அதைச் சேமித்­துப் பயன்­ப­டுத்­தும் இந்­தத் தம்­ப­தி­யர் தங்­கள் கிரா­மத்­துக்­குப் பெருமை சேர்த்­துள்­ள­னர். நாங்­களும் அவர்­க­ளைப் பின்­பற்ற முயற்சி செய்­கி­றோம்," என்று அக்­கி­ராம மக்­கள் கூறு­கின்­ற­னர்.