'திருக்குறளை வைத்து ஏமாற்றுகிறார் மோடி'

'திருக்குறளை வைத்து ஏமாற்றுகிறார் மோடி'

1 mins read
2073721d-82e8-4cfc-a665-2c82d982f438
-

மதுரை: வட­இந்­தி­யா­வில் இருந்து வரு­ப­வர்­கள் இரண்டு திருக்­கு­ற­ளைச் சொல்­லி­விட்­டால் தமி­ழர்­கள் ஏமாந்­து­வி­டு­வார்­கள் என நினைப்­ப­தாக மதி­முக பொதுச் செய­லா­ளர் வைகோ தெரி­வித்­துள்­ளார்.

அத்­திப்­பட்­டி­யில் நடை­பெற்ற திரு­மண நிகழ்­வில் பேசிய அவர், பிர­த­மர் மோடி­யும்­கூட அவ்­வாறு நினைப்­பது தவறு என்­றார்.

"திருக்­கு­ற­ளில் உள்ள கருத்­து­கள் எந்­தப் புத்­த­கத்­தி­லும் கிடை­யாது. எந்த மதத்­தி­லும் கிடை­யாது.

"திருக்­கு­ற­ளுக்கு நிக­ரான ஒர் சிந்­த­னைக் கரு­வூ­லம் உல­கில் எந்த மொழி­யி­லும் கிடை­யாது. அத­னால்­தான் பிர­த­மர் மோடி மிக சாது­ரி­ய­மாக திருக்­கு­ற­ளைப் பற்றி அடிக்­க­டிப் பேசு­கி­றார்," என்­றார் வைகோ.

பிள்­ளை­க­ளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்­க­ளைச் சூட்ட வேண்­டும் என்­றும் சிறார்­க­ளி­டம் கைப்­பே­சி­யைக் கொடுக்­கா­தீர்­கள் என்­றும் வலி­யு­றுத்­திய அவர், கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்­து­வ­தால் சிறார்­கள் கெட்­டுப்­போ­வ­தா­கக் கூறி­னார்.

பிர­த­மர் மோடி அண்­மைக்­கா­ல­மாக பங்­கேற்­கும் நிகழ்ச்­சி­களில் அடிக்­கடி திருக்­கு­றளை மேற்­கோள்­காட்டி பேசி வரு­கி­றார்.

குறிப்­பாக, தமி­ழ­கத்­துக்­குப் பய­ணம் மேற்­கொள்­ளும்­போது திருக்­கு­ற­ளைக் குறிப்­பிட தவ­று­வ­தில்லை.