தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையம் பரிந்துரை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையம் பரிந்துரை

1 mins read
da792f32-879d-4ec5-b9d4-15a2fe1160d1
-

சென்னை: தூத்­துக்­குடி துப்­பாக்­கிச்­சூடு சம்­ப­வம் தொடர்­பாக நான்கு அதி­கா­ரி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என விசா­ரணை ஆணை­யம் தமி­ழக அர­சி­டம் பரிந்­துரை செய்­துள்­ளது.

ஸ்டெர்­லைட் ஆலையை நிரந்­த­ர­மாக மூட வலி­யு­றுத்தி தூத்­துக்­கு­டி­யில் போராட்­டம் நடை­பெற்­றது. இதில் ஆயி­ரக்­கணக்­கா­னோர் பங்­கேற்­ற­னர்.

போராட்­டத்­தின்போது திடீ­ரென வன்­முறை வெடித்­ததை அடுத்து, பொதுச் சொத்­து­கள் சூறை­யா­டப்­பட்­டன. பின்­னர் காவல்­து­றை­யி­னர் நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்­டில் 13 பேர் பலி­யா­கி­னர்.

இது­கு­றித்து விசா­ரணை நடத்த நீதி­பதி அருணா ஜெக­தீ­சன் தலைமை­யில் விசா­ரணை ஆணை­யம் அமைக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து தீவிர விசா­ரணை மேற்­கொண்ட நீதி­பதி அருணா ஜெக­தீ­சன், அண்­மை­யில் முழுமை­யான விசா­ரணை அறிக்­கையை முதல்­வ­ரி­டம் ஒப்­ப­டைத்­தார்.

இந்­நி­லை­யில், இந்­திய காவல் பணி அலு­வ­லர்­கள் உள்­ளிட்ட 17 காவல்­து­றை­யி­னர், மாவட்ட ஆட்­சி­யர் உள்­ளிட்ட நான்கு அலு­வ­லர்­கள் மீது துறை ரீதி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என விசா­ரணை ஆணை­யம் பரிந்­து­ரைத்­துள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

"இந்­தப் பரிந்­து­ரை­கள் சம்­பந்­தப்­பட்ட துறை­க­ளுக்கு அனுப்­பப்­பட்டு அவை துறை­க­ளின் பரி­சீ­ல­னை­யில் உள்­ளதை அமைச்­ச­ரவை கவ­னத்­தில் கொண்­டுள்­ளது," என தமிழக அரசு செய்­திக்­கு­றிப்பு தெரி­விக்­கிறது.