தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகைக்குப் பாலியல் தொல்லை; நண்பர் கைது

1 mins read
8537f138-68f0-4dd4-927e-c077ab7b655d
அமலா பால். படம்: ஊடகம் -

சென்னை: பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக நடிகை அமலா பால் அளித்த புகா­ரின் பேரில், அவ­ரது நண்­ப­ரும் படத்­த­யா­ரிப்­பா­ள­ரு­மான பவ்­நிந்­தர் சிங்கை விழுப்­பு­ரம் காவல்­துறை கைது செய்­துள்­ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு விழுப்­பு­ரத்­தில் உள்ள பெரி­ய­மு­த­லி­யார் சாவடி பகு­தி­யில் சொந்த வீடு வாங்கி அதில் குடி­யே­றி­னார் அமலா பால். அந்த வீட்­டில் நண்­பர் பவ்­நிந்­தர் சிங்­கும் வசித்து வந்­தார்.

இந்­நி­லை­யில், இரு­வ­ருக்­கும் இடையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

இதை­ய­டுத்து, தன் நண்­பர் மீது காவல் நிலை­யத்­தில் புகார் அளித்தார் அமலா.

தம்­மி­டம் பணம் பெற்று மோசடி செய்­த­தா­க­வும் கொலை மிரட்­டல் விடுத்­த­தா­க­வும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் இவர் கூறி­னார்.

இந்­தப் புகா­ரின் பேரில் ராஜஸ்­தான் மாநி­லத்­தைச் சேர்ந்த பவ்­நிந்­தர் சிங் கைதா­னார். இந்த வழக்கு தொடர்­பாக மேலும் 11 பேர் தேடப்­பட்டு வரு­கின்­ற­னர்.

நடிகை அமலா பால் சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு திரைப்­பட இயக்­கு­நர் ஏ.எல்.விஜய்யை காத­லித்து திரு­ம­ணம் செய்­தி­ருந்­தார்.

எனி­னும், குறு­கிய காலத்­தில் இரு­வ­ருக்­கும் இடையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது.

அதை­ய­டுத்து, கண­வ­ரி­டம் இருந்து விவா­க­ரத்து பெற்­றார் அமலா பால்.

அதன் பின்­ன­ரும் தொடர்ந்து திரைப்­ப­டங்­களில் நடித்து வரும் இவர், அண்­மை­யில் ஒரு திரைப்­படத்தை தயா­ரித்­தார்.

இந்­நி­லை­யில், தம் நண்­பர் மீதே அமலா பால் பாலி­யல் புகார் கொடுத்­தி­ருப்­பது திரை­யு­ல­கில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.