தமிழ் படத்துக்கு போலிவுட் இயக்குநர் பாராட்டு

தமிழ் படத்துக்கு போலிவுட் இயக்குநர் பாராட்டு

1 mins read
c168bf11-c80a-457a-879e-87f5d2e9984c
படம்: இன்ஸ்டாகிராம் -

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' எனும் படத்தை பாராட்டியுள்ளார் போலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யாப். பா. ரஞ்சித் இயக்கியுள்ள படங்களில் இதுவே தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்று கஷ்யாப் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். படத்தின் சிறப்புக்காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் அனுராக் காஷ்யப், நடிகர் நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த காஷ்யாப் பா.ரஞ்சித்தை கட்டியணைத்து தன்னுடைய பாராட்டை தெரிவித்துகொண்டார். பலதரப்பு காதல் கதைகளை மையமாக கொண்டுள்ளது இப்படம். காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.