பன்னீர்செல்வத்தை சந்தித்த சசியின் தூதர்

பன்னீர்செல்வத்தை சந்தித்த சசியின் தூதர்

2 mins read
4dd26bea-714e-48a4-9959-02c9d6dc16bc
-

சென்னை: அதி­மு­க­வில் உட்­கட்­சிப் பூசல் உச்­சத்தை அடைந்­துள்ள நிலை­யில், சசி­கலா அனுப்­பிய பெண் தூதர் அண்­மை­யில் ஓ.பன்­னீர்­செல்­வத்தை நேரில் சந்­தித்­த­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

அந்த பெண் தூதர் முன்பு அதி­முக மக­ளிர் அணி­யில் முக்­கிய பொறுப்பை ஏற்­றி­ருந்­த­வர் என்­றும் பழ­னி­சாமி தரப்­புக்கு எதி­ராக மேற்­கொள்ள வேண்­டிய அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்து அவர் ஓபி­எஸ் தரப்­பி­டம் ஆலோ­சனை நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஓ.பன்­னீர்­செல்­வ­மும் சசி­க­லா­வும் மிக விரை­வில் தனித்­த­னியே மாநி­லம் முழு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்டு மாவட்ட வாரி­யாக அதி­முக நிர்­வா­கி­க­ளைச் சந்­தித்­துப் பேச இருப்­ப­தா­க­வும் தேவைப்­பட்­டால் இரு­வ­ரும் இணைந்­தே­கூட பய­ணம் மேற்­கொள்ள வாய்ப்­புள்­ள­தா­க­வும் தெரி­கிறது.

இதற்­கி­டையே, அதி­மு­க­வில் மீண்­டும் தனது செல்­வாக்கை உயர்த்­திக்­கொள்ள விரும்­பும் ஓபி­எஸ், பல்­வேறு சிறப்­புப் பூசை­க­ளைச் செய்து வரு­வ­தாக ஊட­கச் செய்தி ஒன்று தெரி­விக்­கிறது. இதற்­காக கேர­ளா­வில் இருந்து அழைத்து வரப்­பட்­டுள்ள நம்­பூ­தி­ரி­கள் மிகப்­பெ­ரிய யாகங்­களை நடத்தி வரு­வ­தா­க­வும் அச்­செய்­தி­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

விசா­ரணை அதி­காரி நியமனம்

இதற்­கி­டையே, அதி­முக தலைமை அலு­வ­லக கல­வ­ரம் தொடர்­பான வழக்­கில் விசா­ரணை அதி­கா­ரி­யாக காவல் துணை கண்­கா­ணிப்­பா­ளர் வெங்­க­டே­சன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

இவ­ரது தலை­மை­யில் மேலும் நான்கு அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். காவல் ஆய்­வா­ளர்­கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்­வின் சாந்­தக்­கு­மார் ஆகி­யோர் இக்­கு­ழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

அண்­மை­யில் அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்ற மோதல் தொடர்­பான வழக்­கு­களை சிபி­சி­ஐ­டிக்கு மாற்றி தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டது.

இந்த மோத­லின்­போது இரு காவ­லர்­கள் உட்­பட 47 பேர் காய­ம­டைந்­த­னர். காவல்­து­றை­யைச் சேர்ந்த நான்கு வாக­னம் உள்­ளிட்ட பத்­துக்­கும் மேற்­பட்ட வாக­னங்­கள் சேத­ம­டைந்­தன. அச்­ச­ம­யம் பன்­னீர்­செல்­வம் ஆத­ர­வா­ளர்­கள் முக்­கிய கோப்­பு­க­ளைத் திரு­டிச்­சென்­ற­தாக பழ­னி­சாமி தரப்பு குற்­றம்­சாட்­டி­யது.