மாணவி மரண வழக்கு: உச்ச நீதிமன்றம் செல்ல பெற்றோர் முடிவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ள மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை என்றும் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளித் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்பிணை அளித்துள்ளது. இதையடுத்து ஸ்ரீமதியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளனர்.
பிள்ளையார் சிலையை வழிபட பூசை பொருள்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்
கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, தொடர்ந்து 12ஆம் ஆண்டாக பிள்ளையார் சதுர்த்திக்கு இஸ்லாமியர்கள் பூசைப்பொருள்களை வழங்கும் நிகழ்வு கிருஷ்ணகிரி யில் நடைபெற்றது. அங்குள்ள புதுப்பேட்டை சீனிவாசா நகரில் பொதுமக்கள் முழுவதும் களிமண்ணால் ஆன 12 அடி உயர பிள்ளையார்பட்டி பிள்ளையார் சிலையை வைத்து சிறப்பு பூசைகள் செய்து வழிபட்டனர்.

